Home Top Story ஜெய்ன் ரய்யான் வழக்கு: இன்டர்போலின் உதவியை நாடும் போலீஸ்

ஜெய்ன் ரய்யான் வழக்கு: இன்டர்போலின் உதவியை நாடும் போலீஸ்

கோம்பாக்:

ட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட 6 வயது ஜெய்ன் ரய்யான் அப்துல் மதினின் கொலை, கொல்லப்பட்ட இடம் குறித்த கேள்வி, அவரது வீட்டின் அருகே இறந்து கிடந்து 18 நாட்களாகியும், அக்கொலை கேள்விக்குறியாகவே உள்ளது.

இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட நபரின் அடையாளத்தை வெளிக்கொணரும் முயற்சி, கொலை நடந்த இடத்தைக் கண்டறியும் முயற்சி என்பன மிக முக்கியமானது. ஆனால் இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

“இவ்வழக்கு தொடர்பில் இன்டர்போலின் உதவியை நாங்கள் கேட்கிறோம், ஏனெனில் அவர்களின் தரவு சம்பந்தமான தகவல்கள் சில எமக்கு உதவ முடியும்” என்று அவர் கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இது கொலையில் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் ஒன்று என்று அவர் கூறினார்.

சுற்றுப்புற பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள், டாஷ்போர்டு கேமரா காட்சிகளை சரிபார்த்தல், 225 நபர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை காவல்துறை மேற்கொண்டது என்று அவர் கூறினார்.

“இருப்பினும், விசாரணைக்கு உதவக்கூடிய நேர்மறையான முடிவுகள் எதுவும் பெறமுடியவில்லை,” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version