Home Top Story என்னமோ நடக்குது.. திடீரென அதிரும் சூரியன்

என்னமோ நடக்குது.. திடீரென அதிரும் சூரியன்

வாஷிங்டன்: சூரியனைக் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள், சூரியனின் மேற்பரப்பில் ரொம்பவே வினோதமான சூரிய புள்ளிகளைக் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனின் வைப்ரேஷன் பேர்டனில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நமது உலகிற்கும் சரி, இந்த சூரியக் குடும்பத்திற்கும் சரி ரொம்பவே முக்கியமானது சூரியன். நமது பூமியில் அனைத்து உயிரினங்களுக்கும் சூரியனை அடிப்படையாக வைத்தே இயங்கி வருகிறது.

இதனால் சூரியன் குறித்துத் தெரிந்து கொள்வது ரொம்பவே அவசியமான ஒன்றாக மாறுகிறது. இதன் காரணமாக உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் சூரியன் குறித்தும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். 

சூரியன் குறித்த ஆய்வு: இந்திய ஆய்வாளர்கள் கூட ஆத்தியா என்ற சாட்டிலைட்டை சூரியனை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளனர். இதேபோல உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. இதற்கிடையே சூரியனின் தொலைதூரத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய சூரிய புள்ளியை ஆய்வாளர்கள் ஹீலியோசிஸ்மாலஜி தொழில்நுட்பத்தை வைத்துக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சூரியப் புள்ளி மிகவும் பெரியதாக இருப்பதாகவும் இது சூரியனின் அதிர்வு பேட்டன்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது விண்வெளி வானிலையில் குறிப்பிடத்தக்கத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். 

அதென்ன ஹீலியோசிஸ்மாலஜி: ஹீலியோசிஸ்மாலஜி என்பது பூமியில் நில அதிர்வை ஆய்வு செய்வது போன்ற ஒரு துறையாகும். சூரியனின் உள் அமைப்பு மற்றும் இயக்கவியலை ஆய்வு செய்வதே இதன் நோக்கமாகும். இவை சூரியனின் மேற்பரப்பிற்கு ஏற்படும் ஒலி அலைகளை மாற்றங்களை கணக்கிட உதவும்.

சூரியனின் வெப்பம், அடர்த்தி, சுழற்சி வேகம் ஆகியவற்றை வரை படமாக்குவதற்கும், சூரியனின் தொலைவில் உள்ள சூரிய புள்ளிகளைக் கண்டறிவதற்கும் ஆய்வாளர்களை இந்த முறையைப் பயன்படுத்தியுள்ளனர். கேள்விக்குரிய தற்போதைய சூரிய புள்ளி சூரியனின் அதிர்வுகளை மாற்றுவது மட்டுமல்லாமல், சூரிய செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்கிறது.

சூரிய புள்ளிகள்: சூரிய புள்ளிகள் என்பது சூரியனின் உட்புறத்தில் இருந்து வெப்பம் வெளியேறும் காந்தப்புலங்களுடன் தொடர்புடையவை, அவை சூரிய மேற்பரப்பில் கருமையான திட்டுகளாக இருக்கும். இதன் காரணமாகவே ஆங்கிலத்தில் இதை Sunspots என்கிறார்கள்.. அவை நமது வளிமண்டலத்துடன் தொடர்பு கொள்ளும்போது பூமியில் ரேடியோ தகவல்தொடர்புகளைக் கூட சீர்குலைக்கூடியது. இதன் காரணாகவே ஆய்வாளர்களை உதை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். ஆய்வாளர்கள் இப்போது கண்டறிந்துள்ள சூரிய புள்ளிகள் ஒரு பெரிய கிளஸ்டரின் ஒரு பகுதியாகும்.. சூரியன் சுழலும் நிலையில்,​​இந்த சூரிய புள்ளி அடுத்த வாரம் பூமியின் பார்வைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இது வானிலையும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரிய மேற்பரப்பில் இப்போது வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆய்வுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சூரியனில் ஏற்படும் இந்த மாற்றங்கள் பூமியைப் பாதிக்கும் புவி காந்த புயல்களை கூட ஏற்படுத்தும்.. இவை செயற்கைக்கோள் செயல்பாடுகள், மின் கட்டமைப்புகள், ரேடிய ஒலிபரப்புகளைப் பாதிக்கும்.

ஏன் முக்கியம்: அடுத்தாண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் சூரிய சுழற்சி உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சூரியன் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிலையில், அந்த காலகட்டத்தில் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தினால் சூரியக் குடும்பத்தின் தோற்றம், பூமியின் தோற்றம் எனப் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதே ஆய்வாளர்கள் நோக்கமாக இருக்கிறது.










NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version