Home மலேசியா தோக் ஹக்கீம் ஆற்றில் விழுந்த சிறுவனை தேடும்பணி இன்றும் தொடர்கிறது

தோக் ஹக்கீம் ஆற்றில் விழுந்த சிறுவனை தேடும்பணி இன்றும் தொடர்கிறது

கோலா திரெங்கானு:

நேற்று (டிச. 27) மதியம் கம்போங் டோக் ஹக்கீம் என்ற இடத்தில் உள்ள தோக் ஹக்கீம் ஆற்றில், தனது தம்பி மற்றும் நண்பருடன் நீந்தியபோது நீரில் மூழ்கியதாக நம்பப்படும் 11 வயது சிறுவனைத் தேடும் பணி இன்று காலை தொடரும் என கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட முஹமட் ஹராஸ் இல்மான் முகமட் சியாரில் ரிதுவானைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கை இன்று காலை 7 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கும் என்று கோலா திரெங்கானு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ரோசிசா அப்னி ஹஜர் தெரிவித்தார்.

நேற்று இரவு இருள் மற்றும் வலுவான நீரோட்டங்கள் காரணமாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பணியாளர்களை உள்ளடக்கியதேடுதல் மற்றும் மீட்பு பணியை நிறுத்த வேண்டியதாக இருந்தது என்று அவர் கூறினார்.

இந்த தேடுதல் நடவடிக்கையில் மலேசியாவின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, பசுக்கான் போம்பா சிம்பனான் , தேசிய காவல்துறை, மருத்துவ அதிகாரிகள் மற்றும் ரெலா உறுப்பினர்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 82 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக ரோசிசா கூறினார்.

“சாட்சிகளின்படி, பாதிக்கப்பட்டவர், அவரது 9 வயது சகோதரர் மற்றும் ஒரு நண்பருடன் நேற்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு ஆற்றில் குளிக்கச் சென்றனர் என்றும், அப்போது முஹமட் ஃபிராஸ் வஃபியும் அவரது நண்பரும் காப்பாற்றப்பட்டனர், ஆனால் பாதிக்கப்பட்டவர் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டார்” என்றும் அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version