Home Top Story வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10,000 ஆகக் குறைந்துள்ளது – நட்மா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10,000 ஆகக் குறைந்துள்ளது – நட்மா

கோலாலம்பூர்:

நேற்றிரவு (டிசம்பர் 30) நிலவரப்படி நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, அதனடிப்படையில் 10,000 பேர் அங்குள்ள 39 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை நேற்று மாலை 4 மணிக்கு 10,895 பேராக இருந்தது.

நாட்டில் மிக அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலமாக கிளந்தான் உள்ளது. அங்குள்ள நான்கு மாவட்டங்களில் 29 நிவாரண மையங்கள் இயங்குகின்றன. இதில் பாசீர் மாஸில் 1,894 குடும்பங்களைச் சேர்ந்த 6,347 பேரும், தும்பாட்டில் 987 குடும்பங்களைச் சேர்ந்த 2,842 பேரும், ஜெலியில் 103 குடும்பங்களைச் சேர்ந்த 411 பேரும், கோலாக்ராயில் 16 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திரெங்கானுவில், இன்று நண்பகல் டுங்கூன் மற்றும் கோலா திரெங்கானு மாவட்டங்களில் உள்ள ஒன்பது நிவாரண மையங்களில் தற்போது 44 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேராக குறைந்துள்ளது.

இந்நிலையில் ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் சிகாமட்டில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

பகாங்கில், 36 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version