Home மலேசியா PADUவில் பதிவு செயல்முறை ஒத்திவைக்கப்படாது- ஃபாஹ்மி

PADUவில் பதிவு செயல்முறை ஒத்திவைக்கப்படாது- ஃபாஹ்மி

புத்ராஜெயா:

த்திய தரவுத்தள மையத்தின் (PADU) அமைப்பில் ஏற்பட்டதாக கூறப்பட்ட பல தொழில்நுட்ப சிக்கல்கள் விரைவாக தீர்க்கப்பட்டுள்ளதால், அதில் நடைபெறும் பதிவு செயல்முறை ஒத்திவைக்கப்படாது என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டதாக மடானி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான அவர் தெரிவித்தார்.

“PADU அமைப்பு சீராக இயங்குவதைக் காண முடிகிறது, அத்தோடு அதன் பாதுகாப்பு அம்சம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது, எனவே ஒத்திவைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லை ” என்று அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பயனரின் கடவுச்சொல்லை மாற்றம் செய்ய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்துவதற்கான சிக்கலை மேற்கோள் காட்டி, PADU அமைப்பு ஒரு மணி நேரத்திற்குள் சிக்கல் தீர்க்கப்பட்டதாக ஃபாஹ்மி கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version