Home உலகம் பத்து பஹாட் மற்றும் சிகாமாட்டில் 16 வெளிநாட்டவர்கள் கைது – ஜோகூர் குடிநுழைவு துறை

பத்து பஹாட் மற்றும் சிகாமாட்டில் 16 வெளிநாட்டவர்கள் கைது – ஜோகூர் குடிநுழைவு துறை

ஜோகூர் பாரு:

த்து பஹாட் மற்றும் சிகாமாட் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் நான்கு நாடுகளைச் சேர்ந்த 16 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய் (ஜனவரி 9) மற்றும் புதன் (ஜனவரி 10) ஆகிய இரு தினங்களில் பத்து பஹாட் மற்றும் சிகாமாட் பாகுதிகளில் தமது அமலாக்கப் பிரிவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் பஹருதீன் தாஹிர் தெரிவித்தார்.

“சரியான அனுமதி அல்லது ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினர் இங்கு பணிபுரிவதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து இரண்டு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.

மியன்மார் நாட்டைச் சேர்ந்த 8 பேர், பாகிஸ்தான் (4), இந்தோனேசியா (2), வியட்நாம் (2) ஆகிய நாடுகளைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் நேற்று (ஜன. 11) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 20 முதல் 37 வயதுக்குட்பட்ட 8 பெண்களும் 8 ஆண்களும் அடங்குவதாக அவர் மேலும் கூறினார்.

“குடிநுழைவு விதிமுறைகள் 1963 இன் பிரிவு 39(b) இன் கீழ், அவர்களது பாஸ் நிபந்தனைகளை கடைப்பிடிக்காததற்காக, குடிவரவு சட்டத்தின் பிரிவு 6(1)(c) மற்றும் பயண ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கத் தவறியதற்காக வும் மற்றும் அனுமதிக்கப்பட்டதை விட நீண்ட காலம் நாட்டில் தங்கியிருப்பதற்கான அதே சட்டத்தின் பிரிவு 15(1) (இ) கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டனர் ,” என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version