Home மலேசியா 7 புதிய தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவிப்பு

7 புதிய தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவிப்பு

இன்றைய டிஜிட்டல், புதுமை மற்றும் தொழில்நுட்ப சகாப்தத்தின் தேவைகளுக்கு ஏற்ப, தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தின் (சட்டம் 709) கீழ் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும் என்று டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஆணையர் (PDP) மற்றும் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனமான Futurise Sdn Bhd (Futurise) உடன் இணைந்து வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும்.

சம்பந்தப்பட்ட வழிகாட்டுதல்களை உருவாக்குவதுடன், தனிப்பட்ட தரவு பாதுகாப்பு போர்ட்டல் மூலம் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மேலாண்மை செயல்முறையை டிஜிட்டல் மயமாக்க PDP கமிஷனர் (Pesuruhjaya PDP)மற்றும் ஃபியூச்சரைஸ் (Futurise) இணைந்து செயல்படும் என்று கோபிந்த் சிங் டியோ கூறினார்.

PDP ஆணையாளர்களுக்கும் Futurise க்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version