Home மலேசியா இரவு விடுதியில் சக பணியாளரை கொலை செய்ததாக நால்வர் மீது குற்றச்சாட்டு

இரவு விடுதியில் சக பணியாளரை கொலை செய்ததாக நால்வர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு:

ஜாலான் டத்தோ அப்துல்லா தாஹிரில் உள்ள ஒரு இரவு விடுதியில் தங்கள் சக பணியாளரைக் கொலைசெய்ததாக நான்கு பேர் மீது இன்று மாவட்ட நிதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஹிதாயதுல் சியுஹாதா ஷம்சுதின் முன், அவர்களுக்கெதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, போ கியென் ஹுவாட், 28, முஹமட் ஆஷிக் ஓத்மான், 31, வோங் செவ் ஹவ், 48, மற்றும் லிம் வீ ஹுவாங், 32, ஆகியோர் குற்றச்சாட்டுக்கள் புரிந்துகொண்டதாக தலையசைத்தனர், இருப்பினும் கொலைக் குற்றச்சாட்டு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வருவதால், அவர்களிடம் மனு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி அதிகாலை 2.30 மணி முதல் 11.15 மணி வரையான காலப்பகுதியில், அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில் ஹா சுன் ஃபாய் (24) என்பவரின் மரணத்திற்கு காரணமானதாக கூறப்படுகிறது.

அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 தடவைகளுக்கு குறையாத பிரம்படி வழங்க முடியும்.

வழக்கை மீண்டும் செவிமடுக்க மே 23 ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version