Home இந்தியா ஒரே நாளில்.. ஒரே நேரத்தில் அதிசயம். சிங்கிளாவே களமிறங்கிய சீமான்

ஒரே நாளில்.. ஒரே நேரத்தில் அதிசயம். சிங்கிளாவே களமிறங்கிய சீமான்

சென்னை:

வரப்போகும் எம்பி தேர்தலுக்கு, தமிழக அரசியல் கட்சிகள் இன்னும் தயாராகாத நிலையில், இதில் சீமான் மட்டும் முதல் நபராக பட்டையை கிளப்பி கொண் டிருக்கிறார். கடந்த 2019 தேர்தலில், 8 சதவீதம் வாக்குகளை பெற்று, தேர்தல் ஆணை யத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் எண்ணமாக இருந்த நிலையில், வெறும் 4 சதவிகித வாக்குகளை மட்டுமே அப்போது பெற முடிந்தது.

பிறகு, சட்டசபை தேர்தலில், மய்யத்துடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சி போட்டியிட போவதாக பேச்சுக்கள் கிளம்பின.. அப்படி 2 பேரும் கூட்டணி வைத்தால், அதிமுக, திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களுடன், இவர்கள் 2 பேரின் வாக்குகளும் சேர்ந்து, ஒட்டுமொத்தமாக ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் என்று நம்பப்பட்ட நிலையில், அப்படி எதுவுமே நடக்கவில்லை.. “சிங்கம் தனியாகத்தான் வேட்டையாடும்… ஆனால், நாய், ஓநாய், பன்றிகள்தான் கூட்டமாக வேட்டையாடும்” என்று ஒவ்வொரு தேர்தலின்போதும் சொல்லி கொண்டே வருகிறார் சீமான்.. அதேபோல, தனித்துதான் எம்பி தேர்தலில் களமிறங்கினார்.. உள்ளாட்சி மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் உட்பட அனைத்திலும் தனித்தே களமிறங்கினார்.. இப்போதும் தனித்தே களமிறங்க போகிறார்.

எப்போதுமே பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவது நாம் தமிழர் கட்சியின் சிறந்த கொள்கையாக இருந்து வருகிறது.. இதை கமலும் செய்கிறார் என்றாலும், சீமான் இதற்கெல்லாம் முன்னோடியாகவே உள்ளார்..

கடந்த எம்பி தேர்தலின்போது 40 தொகுதிகளிலும் இதுபோலவே தனித்து போட்டி யிட்டு, 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட் பாளர்களையும் நிறுத்தினார்.. திமுக, அதிமுக என பாரம்பரிய மிக்க கட்சிகள்கூட, இப்படி ஒரு சாதனையை செய்யாதபோது, ஆண்-பெண் வேட்பாளர்களுக்கு சரிசமமாக வாய்ப்பு தருகிறாரே சீமான் என்று இளைஞர்களும் இதனை கவனிக்க துவங்கினார்கள். ஆண் – பெண் வேட்பாளர்: ஒவ்வொரு முறையும் தனித்து போட்டி யிடுவதும், மலைபோன்ற கட்சிகளுடன் மோதுவதும், ஆண் வேட்பாளர்களுக்கு நிக ராக பெண் வேட்பாளர்களையும் நிறுத்தி வருவதும், சீமானுக்கான வாக்கு வங்கியை தமிழகத்தில் உயர்த்தியபடியே உள்ளன.

கடந்த முறையும் ஆண் வேட்பாளர்களைவிடவும் பெண் வேட்பாளர்கள் தான் நாம் தமிழர் கட்சியில் பெரிதும் பேசப்பட்டனர்.. மக்களாலும் கவரப்பட்டனர். அந்த வகையில் இந்த முறையும் பெண் வேட்பாளர்கள் களமிறக்க முடிவு செய்திருக்கிறார் சீமான். 20 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்குவதற்கு முடிவு செய்துவிட்டார்.. வேட்பாளர் தேர்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்துக்கும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் திட்டமிட்டுள்ளார்.. இது தொடர்பாகவும், தேர்தல் பணிகள் குறித்தும் சென்னையில் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

அப்போதுதான், நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் தலைமையில் இந்த மாத இறுதியில் பிரமாண்டமான முறையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற போகிறதாம். அந்த மேடையிலேயே சீமான் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க போகிறாராம்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய சீமான், “நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக் கப்பட்டிருந்த விவசாயி சின்னத்தை, வேறொருவருக்கு வேண்டுமென்றே ஒதுக் கியுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். அதில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயி சின்னத்தை பெறுவோம் என்கிற நம்பிக்கை உள் ளது.

சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், வருகிற 20-ந்தேதி கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். அதில் எங்கள் தரப்பு வாதங்களை எடுத்துக் கூறி நிச்சயம் சின் னத்தை பெறுவோம். தனித்து போட்டியிட்டு 7 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங் கியுள்ளோம். கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 0.7 சதவீதம் ஓட்டு கூட கிடைக் காது” என்றர் சீமான்.

இதுவரை தனித்து தேர்தல்களை சந்தித்து வந்தாலும், இதுவரை நாம் தமிழர் கட்சி ஒரு முறைகூட வெற்றி பெற்றதில்லை. அதேசமயம், தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் காங்கிரசின் தோல்விக்கு இந்த கட்சி காரணமாக இருந்துள்ளதையும் மறுக்க முடியாது. அதேபோல, திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பிடித் திருப்பதையும் மறுக்க முடியாது. அந்தவகையில், வரப்போகும் தேர்தலிலாவது, வாக்கு சதவிதத்தை வழக்கம்போல் அதிகரிப்பதுடன், வெற்றிக்கனியையும் எப்படியாவது பறித்துவிட வேண்டும் என்ற தீவிரத்தில் இறங்கிவிட்டார்களாம் சீமானின் தம்பிகள்.. பொறுத்திருந்து பார்ப்போம்.!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version