Home மலேசியா புதிய கல்வி இயக்குநராக அஸ்மான் அட்னான் நியமனம்

புதிய கல்வி இயக்குநராக அஸ்மான் அட்னான் நியமனம்

புத்ராஜெயா: புதிய கல்வி இயக்குநராக அஸ்மான் அட்னானின் நியமனம் இன்று முதல் அமலுக்கு வருவதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த நவம்பரில் ஓய்வு பெற்ற பிகாருதீன் கசாலிக்குப் பதிலாக, கல்வி அமைச்சகத்தின் பள்ளி செயல்பாடுகளுக்கான துணை இயக்குநர் ஜெனரல் அஸ்மான் 58 நியமிக்கப்பட்டார். கல்வி அமைச்சின் கூற்றுப்படி, அஸ்மான் மலேசியா பல்கலைக்கழக கெபாங்சான் பல்கலைக்கழகத்தில் மலாய் கல்வியில் இளங்கலைப் பட்டமும், மலாயா பல்கலைக்கழகத்தில்  தலைமைத்துவம்  முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

அஸ்மான் கல்வித் துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர் என்றும் செகாமாட் மாவட்டக் கல்வி அதிகாரி, ஜோகூர் கல்வி துணை இயக்குநர் மற்றும் ஜோகூர் கல்வி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அமைச்சகத்தில், அவர் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி பிரிவு இயக்குனர், பாடத்திட்ட மேம்பாட்டு பிரிவு இயக்குனர் மற்றும் தினசரி பள்ளி மேலாண்மை பிரிவு இயக்குனராகவும்  பதவி வகித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version