Home Hot News முஹிடினின் மருமகனுக்கு எதிராக நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டு- MACC தலைவர்

முஹிடினின் மருமகனுக்கு எதிராக நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டு- MACC தலைவர்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் மருமகன் மீது பல கிரிமினல் நம்பிக்கை மீறல் (CBT) குற்றச்சாட்டுகள் சுமத்தப்படஉள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அக்குற்றச்சாட்டுக்கள் பற்றிய விவரங்கள் எனக்கு சரியாக நினைவில் இல்லை” என்று கோலாலம்பூறிலுள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 9 அன்று, முஹிடினின் மருமகன் டத்தோஸ்ரீ முஹமட் அட்லான் பெர்ஹான், ஊழல் தடுப்பு அதிகாரிகளைத் தவிர்க்க முயற்சித்து, நாட்டை விட்டு தப்பியோடியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.

அவரது வழக்கறிஞர், டத்தோ டாக்டர் பல்ஜித் சிங் சிடு கூறுகையில், தனது கட்சிக்காரரான அட்லான் சட்டப்பூர்வமாக மலேசியாவை விட்டு வெளியேறியதாகவும், அவரை இழிவுபடுத்துவதற்கும் அவமானப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version