Home Top Story புதிய வானம்; புதிய பூமி… தேசிய பூங்கா

புதிய வானம்; புதிய பூமி… தேசிய பூங்கா

தேசிய பூங்கா கிட்டத்தட்ட 130 மில்லியன் ஆண்டுகள் கன்னி மழைக்காடுகளைக் கொண்டிருக்கும் பூமி. பிரமிக்கத்தக்க இயற்கை அழகை திகட்டாமல் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.

இயற்கை வளங்களின் மனிதனின் கைப்படாத அடர்த்தியான காடுகளின் இதயமாக இந்த தேசிய பூங்கா அமைகின்றது. இயற்கை விரும்பிகளின் சொர்க்கம் என்றால் மிகை ஆகாது.

வெளிநடவடிக்கைகளுக்கு, இயற்கை வனப்பகுதியில் நடைபயிற்சி மற்றும் மலையேற விரும்புபவர்களின் சொர்க்க பூமியாக தேசிய பூங்கா திகழ்கிறது.

உலகின் மிக நீண்ட கெனோப்பி நடைபாதையில் நடந்து செல்லும் அனுபவமே அலாதியின் உச்சம். மீன்பிடித்தல், முகாமிடுதல், பாதுகாப்பான இடத்தில் இருந்து வனவிலங்குகளின் இயற்கை வாழ்வியலைக் கண்டு ரசிப்பது காணக் கிடைக்காத அரிய காட்சிகள் ஆகும்.

அழிந்து வரும் மலேசிய புலிகளின் காப்பகமும் இங்குதான் உள்ளது. அடர்ந்த காடு, அடர்த்தியான மழை போன்றவை இதயத்திற்கு புத்துணர்வு தரும்

மரங்கள் மீது அமைக்கப்பட்டிருக்கும் மேடைகளில் இருந்து இயற்கை வளங்களையும், விலங்குகளின் வாழ்விடங்களையும், கண்காணிப்பது இயற்கை தந்த கொடை என்றால் மிகையாகாது.

ROYAL BELUM NATIONAL PARK – PERAK

லாத்தா பெர்க்கோ நீர்வீழ்ச்சி அழகோ அழகு. புக்கிட் தெரேசெக்கில் இருந்து அகண்ட பார்வையில் இயற்கையின் கொள்ளை அழகே அள்ளிப் பருகலாம்.

Taman Negara National Park. Malaysia

தேசிய பூங்காவின் இயற்கை நாதம் நமது நாடி நரம்புகளில் ஊடுருவி புத்ததெழுச்சியைத் தரும். இயற்கையின் மொத்த அழகும் தேசிய பூங்காவில் தான் கொட்டி கிடக்கிறது. பன்முகத்தன்மை மிக்க புதிய பூமியாகவும் தேசிய பூங்கா திகழ்கிறது.

பூமியில் திகைப்பூட்டும் அற்புதமான இயற்கை அழகின் தாயாக தேசிய பூங்கா உலகம் முழுவதும் பெயர் பதித்திருக்கிறது.

ROYAL BELUM NATIONAL PARK – PERAK

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version