Home Top Story இனி ஓட்டுநர் பயிற்சிக்கான சோதனையை இனி மின்னணு முறையில் (ETesting) செய்யலாம் – அந்தோனி...

இனி ஓட்டுநர் பயிற்சிக்கான சோதனையை இனி மின்னணு முறையில் (ETesting) செய்யலாம் – அந்தோனி லோக்

உ லு லங்காட்:

ப்ரல் 1 முதல், ஓட்டுநர் பயிற்சிபெறும் மாணவர்களுக்கான சோதனையை சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மின்னணு முறையில் (Electronic tracking system) மூலம் தொலைதூரத்தில் இருந்தே அவர்களின் செயல்திறனைக் கண்காணிப்பார்கள் என்றும், இனி கார் ஓட்டும் சோதனையின் போது ஓட்டுநரின் பக்கத்தில் அவரை மதிப்பீடு செய்ய JPJ அதிகாரிகள் இருக்கும் நிலை இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இது ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதி என போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்தார்.

ETesting எனப்படும் மின்னணுமுறை ஓட்டுநர் சோதனை ஏப்ரல் முதல் மூன்று ஓட்டுநர் நிறுவனங்களில் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், அடுத்த ஆறு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

ETesting செயல்முறை குறித்து 2022-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த செயல்முறை 2030-ஆம் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதால் தற்போது கார் ஓட்டும் சோதனையில் ஈடுபடுபவர்களுக்கு முன்புள்ள சோதனை முறை அல்லது புதிய முறையைத் தேர்வு செய்ய அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

புதிய ETesting முறைக்கு ஓட்டுநர் பயிற்சி கழகம் அதிகபட்சமாக 100 வெள்ளி வசூலிக்க முடியும் என்றும் லோக் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version