Home Top Story கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையில் வேலை செய்துவருவதாக நம்பப்படும் 12 வயது சிறுவன் மீட்பு

கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையில் வேலை செய்துவருவதாக நம்பப்படும் 12 வயது சிறுவன் மீட்பு

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் மொத்த விற்பனை சந்தையில் இன்று குடிநுழைவுத்துறை மேற்கொண்ட Ops Kutip என்ற குறியீட்டுப்பெயருடன் நடந்த நடவடிக்கையில், அங்கு தொழிலாளியாக வேலைசெய்துவந்ததாக நம்பப்படும் 12 வயது சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டான்.

மலாய் மொழி பேசத் தெரியாத குறித்த சிறுவன், காய்கறி, மீன் போன்ற பொருட்களை லோரியிலிருந்து இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான்.

குறித்த சிறுவனுக்கு தமிழ் மொழி பேசத் தெரிந்ததால், இரண்டு மாதங்களுக்கு முன், மியன்மாரிலிருந்து தரைவழியாக அவர் மலேசியாவிற்குள் நுழைந்ததாக ஒப்புக்கொண்டார்.

தனது குடும்ப வாழ்வாதாரத்திற்காக மியன்மாரில் உள்ள தனது குடும்பத்தைப் பிரிந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தாண்டி சிறுவன் இங்கு வந்ததாக நம்பப்படுகிறது, இருப்பினும் அவர் நிலம் வழியாக அவர் நுழைந்தது சட்டபூர்வமானது என்று நம்பப்படுகிறது.

இது தொடர்பில் குடிநுழைவுத்துறை மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version