Home Top Story உரிமமின்றி கடன்களை வழங்கிய குற்றச்சாட்டில் 14 உள்ளூர் ஆண்கள், 3 வெளிநாட்டினர் கைது

உரிமமின்றி கடன்களை வழங்கிய குற்றச்சாட்டில் 14 உள்ளூர் ஆண்கள், 3 வெளிநாட்டினர் கைது

ஜோகூர்:

ஜோகூர் மாநிலத்தில் முறையான உரிமமின்றி கடன்களை வழங்குவதாக நம்பப்படும் 14 உள்ளூர் ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று வெளிநாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து “ ஐந்து வாகனங்கள், 26 கைத்தொலைபேசிகள், இரண்டு மடிக்கணினிகள், வாடிக்கையாளரின் அடையாள அட்டைகளின் 40 பிரதிகள், கடன் ஒப்பந்தங்களின் ஒன்பது பிரதிகள், வாடிக்கையாளரின் தொடர்புகளைக் கொண்ட ஒரு கோப்பு, அச்சுப்பொறி மற்றும் கடன் பதிவுகளுடன் ஆறு புத்தகங்களையும்” போலீசார் கைப்பற்றியதாக, மாநில காவல்துறை தலைவர், தலைமை ஆணையர் M குமார் தெரிவித்தார்.

மேலும் ” இரண்டு விசைப்பலகைகள் மற்றும் கணினி mouse, ஒரு UBS , ஒரு மானிட்டர் திரை, ஒரு மோடம், மூன்று பைகள், 14 பாஸ்போர்ட் மற்றும் RM48,366 ரொக்கம் மற்றும் ஒன்பது காசோலைகளும் அடங்கும்” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு பணம் கடன் கொடுத்தல் சட்டம் 1951 இன் பிரிவு 5 (2) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version