Home Top Story ஈராக் தேசிய பூப்பந்து அணியின் தலைவராக மலேசிய பயிற்சியாளர் ரூபன்ராஜ் வேலாயுதம் நியமனம்

ஈராக் தேசிய பூப்பந்து அணியின் தலைவராக மலேசிய பயிற்சியாளர் ரூபன்ராஜ் வேலாயுதம் நியமனம்

கோலாலம்பூர்:

ஈராக் தேசிய பூப்பந்து அணியின் தலைவராக மலேசிய பயிற்சியாளர் ரூபன்ராஜ் வேலாயுதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈராக் தேசிய ஒலிம்பிக் நிர்வாகம் மற்றும் பேட்மிண்டன் கூட்டமைப்புடன் இணைந்து அவர் பூப்பந்து விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வார் என நம்பப்படுகிறது .

மலேசியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் ரூபன்ராஜ், மலேசிய கலப்பு இரட்டையர் அணியில் முன்னாள் வீரராக இருந்த அனுபவம் அவருக்கு பெருதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ரூபன்ராஜ்ஜின் இந்த நியமனம் ஈராக் தேசிய பூப்பந்து அணியினை புதிய அத்தியாயத்திற்கு எடுத்துச் செல்லும் என்றும், அவரது வழிகாட்டுதலின் கீழ் வீரர்கள் முகுந்த பயனடைவார்கள் என்று நம்புவதாக, அந்நாட்டு பூப்பந்து வாரியத்தின் உறுப்பினர்களான முஹமட் தில்ஷாத் கேப்ரியல் மற்றும் வான் ஷாவ்கி ஆகியோர் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version