Home Top Story iPhone இல் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவது தொடர்பில் ஆப்பிள் நிறுவனம் ஆலோசனை

iPhone இல் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவது தொடர்பில் ஆப்பிள் நிறுவனம் ஆலோசனை

சான்பிரான்சிஸ்கோ:

ப்பிள் நிறுவனம் வெளியிடவிருக்கும் புதிய ஐஃபோனில், Google நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு உருவாக்கமான ஜெமினி என்னும் செயலியைப் பயன்படுத்துவது குறித்து Google நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இரு பெரிய தொழில்நுட்பங்களிடையே நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தை தொடக்கநிலையில் உள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய இலக்குகள் பற்றிய நோக்கங்கள் இன்னும் வரையறுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.

ஐஃபோனில் சேர்க்கப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பச் செயலி பெரிய அளவிலான தரவு மற்றும் தகவல்களை தானாக உருவாக்கும் வல்லமை கொண்டதாக இருக்க வேண்டும். எனவே, ஆப்பிள் நிறுவனம் கூகல் மட்டுமல்லாது மேலும் சில செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளங்களைக் கொண்டுள்ள பெரிய நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version