Home Hot News சீரான பொருளாதாரத்திற்கு நிதி சீரமைப்புகள் அவசியம்

சீரான பொருளாதாரத்திற்கு நிதி சீரமைப்புகள் அவசியம்

மலேசியப் பொருளாதாரம் நிலையான, சீரான வழியில் வளர்ச்சி கண்டு நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் நிதி சீரமைப்புகளை செயல்படுத்த வேண்டும்.

உயர் வருமானம் கொண்ட பொருளாதார அந்தஸ்தை இலக்காகக் கொண்டு மக்களின் நலன்களுக்காக பகிர்ந்தளிக்கப்படக் கூடிய நிலையான நிதி வளத்தை உருவாக்கும் தளத்தை விரிவுபடுத்தும் நிதி சீரமைப்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

வௌிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க கடனுக்கு அடிமையாகும் நிலைக்கு மடானி அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கும் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வௌியிட்ட ஒரு பதிவில் அவர் கூறினார். அன்வார் தலைமையில் நேற்று நடைபெற்ற நிதி கொள்கை செயற்குழு கூட்டத்தில் மலேசிய பொருளாதாரத்தின் தற்போதைய சூழல், நாட்டின் நிதி நிலையின் குறுகிய, நடுத்தர கணிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மக்களின் வளர்ச்சிக்கான அம்சங்களில் முதலீடு செய்வதற்கும் பாதிக்கப்பட்ட மேலும் தேவைப்படுவோருக்கு உரிய உதவிகளை வழங்குவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11.8 விழுக்காடு வரி வருவாயுடன் மக்களின் வளர்ச்சிக்கான அம்சங்களில் முதலீடு செய்வதற்கும்  உரிய திட்டங்களில் கவனம் செலுத்தப்படும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ச்சியடையாத நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு இந்த நிதி சீரமைப்பு மிகவும் அவசியமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version