Home ஆன்மிகம் திருவாசகம்

திருவாசகம்

மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை ‘திருவாசகம்’ என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது.

பாடல்: விலங்கும் மனத்தால், விமலா உனக்கு கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழ

ல்கள் காட்டி, நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே.

பொருள்:

மாசில்லாத சிவபெருமானே… ஒருமைப்படாமல் சிதறு கின்ற சிந்தனைகளை கொண்ட மனதால், உன்னிடம் கலந்து நிற்கின்ற அன்பு நிறைந்து, அந்த நிறைந்த அன்பால் கசிந்தும், உள்ளம் உருகியும் நிற்கின்ற நல்ல தன்மை இல்லாத சிறுமையுடையவன் நான். அப்படிப்பட்ட எனக்கும் அருள்செய்து, இந்த உலகில் உணரத்தக்க வண்ணம் கருணையாக வந்து, உன்னுடைய நீண்ட அழகிய கழல்

அணிந்த திருவடிகளைக் காட்டி, நாயினும் கேவலமான நிலையில் கிடந்த அடியேனுக்கு, பெற்ற தாயை விடவும் அதிகமான அன்பை செலுத்தும் தத்துவப் பொருளே.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version