Home Hot News ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்

ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல்

ம.இ.கா நடப்பு தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

எஸ்.வெங்கடேஷ்

கோலாலம்பூர்:

ம.இ.கா தேசியத் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் இன்று 27.3.2024 புதன்கிழமை காலை 10 மணிக்கு மேல் தொடங்கியது.

தலைநகரில் உள்ள ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற இந்த வேட்பு மனுதாக்கலில், முன்னதாக மாநில ரீதியாக ஆதரவு ஆவணங்கள் பெறப்பட்டன.

பட விளக்கம்: ஆவணம் சமர்ப்பிக்கும் ஜோகூர் மாநில மஇகா தொடர்புக்குழுவினர்.

கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையிலான தேசியத் தலைவர் தேர்தல் குழுவினர் இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்டனர்.

ஆவணங்களை சமர்ப்பித்த மாநில தொடர்பு குழுக்கள் கட்சியின் நடப்பு தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன், மீண்டும் போட்டியின்றி தேசியத் தலைவராக தேர்வு செய்யப்படுவதற்கு முழு ஆதரவு தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version