Home ஆன்மிகம் வீட்டில் சந்தோசம் நிலைத்திருக்க வேண்டுமா…? இதை மறந்தும் செய்யாதீங்க…!

வீட்டில் சந்தோசம் நிலைத்திருக்க வேண்டுமா…? இதை மறந்தும் செய்யாதீங்க…!

பொதுவாகவே வீட்டில் நிம்மதி இல்லை என்றால் கோவிலுக்கு சென்று, கடவுளை வழிப்பட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி வருவது பலரது வழக்கம். நாம் கடைப்படித்து வந்தாலும் அமைதி, செல்வம் மற்றும் இன்பம் என அனைத்தும் நிறைந்திருக்கும்.
* பணம் கொடுக்கல் வாங்கலை வீட்டின் வாசல் படியில் வைத்து செய்ய கூடாது.
* செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமையில் செய்து நல்லது.
* வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.
* வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.
* எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.
* உப்பை தரையில் சிந்தக்கூடாது.
* காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிக்க செய்வது நல்லது.
* தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.
* வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.
* வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்த்தால் செல்வம் பெருகும்.
* விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். `அணைப்பது’ என்று கூற கூடாது.
* வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்க வேண்டும்.
* அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.
* அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.
* பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.
* இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version