Home Top Story பொண்டாட்டி ஓடிப் போனா என்ன அவ புடவை இன்னமும்…: கமல் பற்றிய விந்தியா பேச்சுக்கு ரசிகர்கள்...

பொண்டாட்டி ஓடிப் போனா என்ன அவ புடவை இன்னமும்…: கமல் பற்றிய விந்தியா பேச்சுக்கு ரசிகர்கள் கண்டனம்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடுபவர்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார் நடிகை விந்தியா. இந்நிலையில் மதுரை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான டாக்டர் சரவணனுக்காக வாக்கு சேகரித்தபோது நடிகை விந்தியா பேசியது உலக நாயகன் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. திமுக கூட்டணியில் இப்போ ஒரு மானஸ்தன் சேர்ந்திருக்கிறார். அவர் தான் கமல் ஹாசன். ரொம்ப ரோஷக்காரர். பொதுவா சீப்பான, விலை கம்மியான துணியை வாங்கினால் அது தண்ணில பட்டுடுச்சுனா சாயம் போகும். ஆனால் தண்ணியே படாமல் சாயம் போபவர் கமல் ஹாசன். கலைஞரின் மகன் ஸ்டாலின் என்று சொல்வதே கெட்ட வார்த்தனைனு நினைத்துப் பேசின கமல் ஹாசன், இன்று அவர் கூட்டணிக்கு ஸ்டாலின் மகன் உதயநிதிகிட்ட கை கட்டி உட்கார்ந்துக்கிட்டு இருக்கிறார்.

அவர் கூட்டணி பேச்சுவார்த்தை முடிச்சிட்டு வெளியே வந்த உடனேயே அவர் கட்சிக்காரங்க கேட்டாங்களாம், என்ன சார் நம்ம நிலைமைனு. நம்மை டார்ச்லைட்டிலேயே நிக்கச் சொன்னாங்கனு சொன்னாராம். அப்படியா சார், எத்தனை தொகுதி, எந்த தொகுதினு கேட்டாங்களாம். தொகுதியில இல்லப்பா, கையில டார்ச்லைட்டை புடுச்சுக்கிட்டு நிக்கச் சொன்னாங்கனு சொன்னாராம். இந்த அழகுல கட்சி ஆரம்பிக்கும்போது டார்ச்லைட்டை வீசி, டிவியை எல்லாம் உடைச்சு, திமுகவை எதிர்த்து ஆரம்பிச்ச கமல் ஹாசன். அன்னைக்கே டார்ச்லைட்டை வீசியது டார்ச்லைட்டை உடைக்க தான், டிவியை உடைக்க இல்லை. யாரோ ஒரு மானஸ்தன், உண்மையான நண்பர் போய் நேர்மையாக கேட்டிருக்காங்க கமல் ஹாசனை. என்ன சார் டிவியை எல்லாம் உடைச்சிட்டீங்க. திமுகவை எதிர்த்தீங்க. இன்னைக்கு அதே திமுகவுடன் கூட்டணி வச்சிருக்கீங்களே, இது நல்லா இருக்கானு கேட்டாராம்.

டிவி உடைஞ்சா என்னப்பா ரிமோட் என்கிட்ட தான் இருக்குனு சொன்னாராம். எவ்வளவு முட்டாள்தனம். இது எப்படி இருக்குனா, பொண்டாட்டி ஓடிப் போனா என்ன அவ புடவை இன்னமும் வீட்டுக்குள்ள தான் இருக்குனு சொல்ற மாதிரி இருக்கு. இவங்க எல்லாம் எந்த அறிவை நம்பி அரசியலுக்கு வந்து அரசியல் பண்றாங்கனு தெரியல என்றார். விந்தியாவின் பேச்சு சரியில்லை. உலக நாயகனை, எல்லாம் தெரிந்த மனிதரை இந்த அளவுக்கு மோசமாக விமர்சித்திருக்கிறார். இது அநாகரீகம் என கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version