Home Hot News பி எஸ் எ உலகக் கிண்ண ஸ்குவாஷ் கிளாஸிக் போட்டி 2024; கிண்ணத்தை கைப்பற்றினார் சிவசங்கரி

பி எஸ் எ உலகக் கிண்ண ஸ்குவாஷ் கிளாஸிக் போட்டி 2024; கிண்ணத்தை கைப்பற்றினார் சிவசங்கரி

கோலாலம்பூர்:

தேசிய மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனையான எஸ் சிவசங்கரி, உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள எகிப்தைச் சேர்ந்த ஹனியா எல் ஹம்மாமியை வீழ்த்தி, லண்டன் கிளாசிக் 2024- வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டார்.

25 வயதான சிவசங்கரி, லண்டன் அலெக்ஸாண்ட்ரா பேலஸ் மைதானத்தில் நடைபெற்ற லண்டனி ஸ்குவாஷ் சம்பியன் போட்டியின் இறுதிச் சுற்றில், 81 நிமிடங்களில் 3-2 என்ற கோல் கணக்கில் ஹனியாவை வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்தப் போட்டியின் காலிறுதியில், ஸ்குவாஷ் விளையாட்டின் உலகின் முதல் நிலை வீராங்கனையை தோற்கடித்து அனைவரையும் ஆச்சரியப்படவைத்தார். தொடர்ந்து உலகின் நான்காவது தர ஆட்டக்காரரை வீழ்த்தி மலேசியாவிற்கு ஒரு புதிய வரலாற்றை உருவாக்கினார் என்றால் மிகையாகாது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version