Home Top Story அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு

அமெரிக்க டாலருக்கு எதிரான ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு

கோலாலம்பூர்:

ன்று காலை 9.00 மணி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 4.7515/7535-லிருந்து 4.7480/7520 5 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகள் நேர்மறையானதாக இருந்தாலும், கிரீன்பேக் அதிகமாக வாங்கப்பட்டதால் அமெரிக்க டாலர் குறியீடு (DXY) பின்வாங்கியது என்று பாங்க் முஹமலாட்டின் தலைமைப் பொருளாதார நிபுணர் முகமட் அஃப்ஸானிசம் அப்துல் ரஷித் கூறினார்.

மேலும் நேற்று (ஏப்ரல் 2) முடிவில் யூரோவிற்கு எதிராக 5.1036/1057 இலிருந்து 5.1126/1170 ஆக குறைந்தது மற்றும் ஜப்பானிய யென் 3.1326/1339 இலிருந்து 3.1328/1356 ஆக இருந்தது. இருப்பினும், இது பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக அதன் முந்தைய மதிப்பான 5.9717/9742 இலிருந்து 5.9687/9737 ஆக உயர்ந்தது.

அத்தோடு சிங்கப்பூர் டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு நேற்று 3.5134/5151 ஆக இருந்து 3.5124/5158 ஆக உயர்ந்தது.

அத்தோடு ஆசியான் நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version