Home மலேசியா அரசியல் மித்ராவுக்கு ஆலோசனை குழு...

மித்ராவுக்கு ஆலோசனை குழு தேவை

 மித்ரா அமைப்பு மீண்டும் பிரதமர் துறையின் கீழ் மாற்றப்பட்டதற்கு அரசு சாரா அமைப்புகள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டன.

கடந்த 2023 டிசம்பர் மாதம் மித்ரா இனி ஒற்றுமை அமைச்சின் கீழ் இயங்கும் என அறிவித்தார். அதற்கு பல அரசு சாரா இயக்கங்களும் அரசியல்  தலைவர்களும் மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட வேண்டும் என குரலெழுப்பினர் என்று அரசு சாரா இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் டிரா மலேசியா தலைவர் சரவணன் சின்னப்பன் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக 2024 பிப்ரவரி 8ஆம் தேதி மித்ரா பிரதமர் இலாகா கண்காணிப்பிலேயே சிறப்பாக செயலாற்ற முடியும் என்ற கோரிக்கையை 55 அரசு சாரா அமைப்புகள் ஒன்றிணைந்து பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் முன்வைத்தன.

மேலும் மார்ச் 18ஆம் தேதி அந்த அமைப்பு நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் அமைதியாக ஒன்றுகூடி அக்கோரிக்கை அடங்கிய அறிக்கையை பிரதமரின் பிரதிநிதி , சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கனிடம் சமர்ப்பித்தனர்.

2024 ஏப்.3 ஆம் தேதி பிரதமரும் ஒற்றுமைத்துறை அமைச்சரும் இணைந்து மித்ரா மீண்டும் பிரதமர் இலாகா கீழ் மாற்றப்படும் என முடிவெடுத்துள்ளனர். அவர்களுக்கு தங்களது நன்றியை மீண்டும் ஒருமுறை டிரா மலேசியா தலைவரும் அரசு சாரா இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளருமான சரவணன் தெரிவித்துக்கொண்டார்.

தொடர்ந்து பிரதமரும் மித்ரா சிறப்பு பணிக்குழுத் தலைவர் ப.பிரபாகரனும் கலந்தாலோசித்து மித்ராவிற்கு துணையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தன்னார்வ இயக்கங்கள், நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசு சாரா இயக்கங்களின் சார்பாக முன் வைப்பதாக அவர் சொன்னார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version