Home Hot News இந்தியர்களின் பொருளாதார உருமாற்றம்: அடுத்தகட்ட நகர்வில் டத்தோ ரமணன் தீவிரம்

இந்தியர்களின் பொருளாதார உருமாற்றம்: அடுத்தகட்ட நகர்வில் டத்தோ ரமணன் தீவிரம்

பி.ஆர்.ராஜன்

மலேசிய இந்தியர்களின் பொருளாதார உருமாற்றத்திற்கு நன்கு திட்டமிட்டு செயல்பட்டு வரும் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், இதன் வழி இந்தியத் தொழில்முனைவோர்களை அடுத்தகட்ட உயர்வுக்கு அழைத்துச் செல்லும் நகர்வுகளை முன்னெடுத்திருக்கிறார்.

அதன் முதல்கட்டமாக தம்முடைய அமைச்சின் கீழ்செயல்படும் ஒரு நிறுவனமான தெக்குன் நேஷனல்பெர்ஹாட் ஸ்பூமி வர்த்தக கடனுதவித் திட்டத்திற்கான நிதிஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கும் முயற்சியில் அவர் வெற்றிகண்டிருக்கிறார்.

இதுவரை 30 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த அந்த நிதி ஒதுக்கீடு டத்தோ ரமணனின் பெரு முயற்சியில் 60 லட்சம் ரிங்கிட்டாக உயர்வு கண்டிருக்கிறது. கடனுதவி நிதியும் பன்மடங்காக உயர்வு கண்டிருக்கிறது.

அண்மைக் காலம் வரை 1,000 ரிங்கிட் முதல் 1லட்சம்ரிங்கிட் வரை வழங்கப்பட்ட ஸ்பூமி கடனுதவி இப்போது 50,000 முதல் 1 லட்சம் ரிங்கிட் என அதிகரித்திருக்கிறது.

இந்திய தொழில்முனைவோரின் பொருளாதார அந்தஸ்துஉயர வேண்டும். அவர்களை முன்னேற்றத்தின் அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற இலக்கில் அவர் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

பெண்களுக்கு விரைவில் இனிப்பு செய்தி

இந்த முன்னேற்றத்தில் பெண்களும் விடுபட்டு விடக்கூடாதுஎன்ற உன்னத நோக்கத்தில் பெண் தொழில்முனைவோருக்கான புதிய பொருளாதாரஉருமாற்றத் திட்டங்களைக் கொண்டு வருவதிலும் அதற்குரிய நிதி வளங்களை உருவாக்குவதிலும் டத்தோ ரமணன் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார்.

ஒரு பெண் தொழில்முனைவோரின் வெற்றியானது ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் என்பதை நன்கு உணர்ந்துள்ள அவர், இதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்விரைவில்பெண்களுக்கான இனிப்பான செய்திகள் அறிவிப்புகளாகவரும் என்று அவர் குறிப்பிட்டார்.

மித்ரா சிறப்பாகச் செயல்படும்

இதனிடையே மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா) சிறப்புப் பணிக்குழுத் தலைவராகப் பதவி ஏற்று கிட்டத்தட்ட ஓராண்டு திறம்படப் பணியாற்றி பாராட்டுகளை அள்ளிக்குவித்த டத்தோ ரமணன், பத்து தொகுதி நாடாளுமன்றஉறுப்பினர் .பிரபாகரன் தலைமையில் இனி மித்ராவெற்றிகரமாகச் செயல்படும் என்று  நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நம்பகத்தன்மை நிறைந்த சான்றிதழையும் டத்தோ ரமணன் தலைமைத்துவத்திற்கு வழங்கியது அவரின் மக்கள் பணிக்கான ஒரு மகுடமாகத் திகழ்ந்தது.

இப்போது மித்ரா மீண்டும் பிரதமர் இலாகாவுக்கே திரும்பி இருக்கின்ற நிலையில் பிரபாகரனுக்கு தாம் உட்பட இந்தியநாடாளுமன்றசட்டமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள், நிதித்துறை சார்ந்த நிபுணர்கள், பெரும் உதவியாகவும் பக்கபலமாகவும் இருக்கும்பட்சத்தில் மித்ரா செயல்திட்டங்கள், உதவிகள் தொய்வின்றி அதன் இலக்கை சென்றடையும் என்று டத்தோ ரமணன்  கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version