Home தொழில்நுட்பம் உங்கள் செல்போனை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமா? இத பண்ணுங்க.

உங்கள் செல்போனை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமா? இத பண்ணுங்க.

ன்றைய நவீன உலகில் அனைத்துமே ஆன்லைன் என்று ஆகிவிட்ட பிறகு, அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். சைபர் கிரைம் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உங்களுடைய ஸ்மார்ட்போனை ஹேக்கர்களிடமிருந்து எப்படி பாதுகாப்பது என்பது முக்கியமானது.

வலிமையான பாஸ்வோர்ட்கள்: ‘1 2 3 4 5 6’ போன்ற எளிமையான பாஸ்வோர்ட்களை அமைப்பதை காட்டிலும் யாரும் யூகிக்க இயலாத வலிமையான ஒன்றை தேர்வு செய்யுங்கள். அடையாளங்கள், எண்கள் மற்றும் வார்த்தைகள் அடங்கிய ஒரு வலுவான பாஸ்வேர்டை நீங்கள் அமைக்கும் பொழுது அதனை கண்டுபிடிப்பது சற்று கடினமான காரியமாக இருக்கும்.

வைஃபை நெட்வொர்க்: பாதுகாப்பற்ற வைஃபை நெட்வொர்க்கள் குறிப்பாக பப்ளிக் ஹாட்ஸ்பாட்டுகள் பயன்படுத்தி உங்களுடைய ஸ்மார்ட் போனில் இன்டர்நெட் உபயோகிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இதுபோன்ற வைஃபை நெட்வொர்க்களை ஹேக்கர்கள் எளிதாக ஹேக் செய்து விடுவார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நீங்கள் பப்ளிக் வைஃபை நெட்வொர்க்கை பயன்படுத்தும் பொழுது விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்களை உபயோகிக்கலாம். குறிப்பாக ரகசியத்துக்கு உட்பட்ட தகவல்களை பயன்படுத்தும் பொழுது இதனை நீங்கள் உபயோகிப்பது நல்லது.

ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர்: உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஆன்டிவைரஸ் அல்லது மொபைல் செக்யூரிட்டி சாஃப்ட்வேரை இன்ஸ்டால் செய்வதன் மூலமாக மால்வேர்களை நீங்கள் தவிர்க்கலாம்.

அப்ளிகேஷன்களுக்கு அனுமதி: எந்த ஒரு தெர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் அல்லது வெப்சைட்டுக்கு உங்களுடைய கான்டக்டுகள், கேலரி மற்றும் பல போன்றவற்றை பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு முன்பு ஒரு முறைக்கு பலமுறை சிந்திக்கவும். தெரியாத அல்லது நம்பகம் இல்லாத மூலங்களில் இருந்து அப்ளிகேஷன்கள் இன்ஸ்டால் செய்வதை தவிர்க்கவும்.

டேட்டா என்கிரிப்ட்: உங்கள் சாதனத்தில் என்கிரிப்ஷன் செட்டிங்ஸை எனேபிள் செய்வதன் மூலமாக அதிகாரமற்ற அணுகல்களில் இருந்து உங்களுடைய டேட்டாக்களை நீங்கள் பாதுகாக்கலாம். குறிப்பாக உங்களுடைய ஸ்மார்ட் போனில் ரகசியத்திற்கு உட்பட்ட பல தகவல்கள் இருக்கும் பொழுது இந்த அம்சத்தை நீங்கள் மறக்காமல் எனேபிள் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

வழக்கமான பேக்கப்: உங்களுடைய ஸ்மார்ட் போன் டேட்டாக்களை கிளவுட் ஸ்டோரேஜ் சர்வீஸ் அல்லது வெளிப்புற சாதனத்திற்கு வழக்கமான இடைவெளியில் பேக்கப் செய்யும் பழக்கத்திற்கு வாருங்கள். பாதுகாப்பு மீறல்கள் அல்லது சாதனம் தோல்வியடையும் சமயத்தில் உங்கள் டேட்டா பாதுகாப்பாக இருப்பதை இது உறுதி செய்யும்.

பிஷிங் அட்டாக்குகள்: பாதுகாப்பற்ற லிங்குகளை கிளிக் செய்யும் முன்பும் அல்லது அட்டாச்மென்ட்களை டவுன்லோட் செய்வதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் மால்வேர் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version