Home Uncategorized பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில்.. பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்

பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில்.. பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக வேட்பாளர்

கொல்கத்தா: பிரச்சாரத்தின் போது பெண் ஒருவருக்குப் பொதுவெளியில் பாஜக வேட்பாளர் முத்தமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் இப்போது லோக்சபா தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கே திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி என்று கடுமையான போட்டி நிலவுகிறது.இதற்கிடையே மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் ஒருவர் திடீரென பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.

முத்தம்: மேற்கு வங்கத்தின் மால்டா வடக்கு எம்பி ககென் முர்மு சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கே பிரச்சாரத்திற்குச் சென்ற போது அவர் பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்தது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. வாக்கு சேகரிக்கச் சென்ற போது திடீரென அவர் அங்கிருந்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களை திரிணாமுல் கட்சியினர் இணையத்தில் பரப்பி பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் கூட இது தொடர்பான படங்களைப் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளனர்.

சாடல்: திரிணாமுல் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “இதை உங்களால் நம்ப முடியவில்லை என்றால், நாங்கள் அதைத் தெளிவுபடுத்துகிறோம். ஆம், இவர்தான் பாஜக எம்பியும் மால்டா வடக்கு வேட்பாளருமான காகென் முர்மு. அவர் பிரச்சாரத்தில் ஒரு பெண்ணை முத்தமிடுகிறார். ஒரு பக்கம் பாஜக எம்பிக்கள் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துகிறார்கள். மற்றொரு பக்கம் பெங்காலி பெண்கள் குறித்து ஆபாசமாகப் பாடும் நபர்களுக்குத் தேர்தலில் போட்டியிட சீட் தருகிறார்கள். பாஜகவில் பெண்களுக்கு எதிரான அரசியல்வாதிகளுக்குப் பஞ்சமில்லை. இப்படித்தான் மோடியின் குடும்பம் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறது. இப்போதே இப்படி என்றால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்” என்று கடுமையாகச் சாடியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று திங்கள்கிழமை சிஹிபூர் என்ற கிராமத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. திரிணாமுல் தலைவர்கள் இதை மிகப் பெரியளவில் பரப்பி விமர்சித்து வருகிறார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ்: இது குறித்து திரிணாமுல் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பாப்லா சர்க்கார் கூறும்போது,​​’வட மால்டா மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஒரு பெண் ஒருவருக்கு முத்தம் கொடுப்பதை சமூக வலைத்தளங்களில் பார்த்தோம். உண்மையில், இந்த வகை கலாச்சாரம் அவர்களுக்குத் தான் பொருந்தும்.. ஓட்டு கேட்க வரும் போதே இப்படி நடந்து கொள்ளும் இவர்கள் வென்றால் என்ன செய்வார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்? மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்” என்று சாடினார். மேற்கு வங்க மால்டா வடக்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ககென் முர்மு தற்போது அங்கு சிட்டிங் எம்பியாக இருக்கிறார். அவருக்குத் தான் பாஜக மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. எம்பியாக தேர்வாகும் முன்பு ககென் முர்மு, ஹபீப்பூர் சட்டசபை தொகுதியில் 4 முறை எம்எல்ஏவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்: இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையாக வெடிக்கும் நிலையில் இது தொடர்பாக ககென் முர்மு ஒரு வழியாக விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “அந்த பெண் என் உறவினர். அவர் எனக்குக் குழந்தை மாதிரி. குழந்தையை முத்தமிடுவது தவறல்ல. பெண்களை நான் தாய்மார்களாகவே பார்க்கிறேன்.. பாஜக அனைத்து பெண்களை மதிக்கிறது. சிலர் செய்த திட்டமிட்ட சதி இது. என்னை காலி செய்யத் திட்டமிட்டுச் சதி செய்துள்ளனர்” என்று சாடினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version