Home Hot News போர்ஃப்ஸ் பட்டியலில் 50 பெரும் பணக்காரர்கள்: 5ஆவது இடத்தில் ஐஓஐ சகோதரர்கள்

போர்ஃப்ஸ் பட்டியலில் 50 பெரும் பணக்காரர்கள்: 5ஆவது இடத்தில் ஐஓஐ சகோதரர்கள்

மலேசியாவில் 50 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 2 விழுக்காடு அதிகரித்து 83.4 பில்லியன் அமெரிக்க டாலராக (398 பில்லியன் ரிங்கிட்) இவ்வாண்டு பதிவாகி இருக்கிறது.

ரிங்கிட்டின் மதிப்பு பலவீனம் அடைந்திருக்கின்ற நிலையில் உள்நாட்டுச் சந்தை மதிப்பு இவர்களின் சொத்துமதிப்பைப் பாதிக்கவில்லை என்று போர்ஃப்ஸ் வர்த்தக சஞ்சிகை தெரிவித்தது.

போர்ஃப்ஸ் வர்த்தக சஞ்சிகையின் இத்தகவல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஐஓஐ குழுமத்தின் லீ இயோ சோர், இயோ செங் ஆகியோரின் சொத்து மதிப்பு 5.35 பில்லியன் அமெரிக்க டாலர் (25.5 பில்லியன் ரிங்கிட்) ஆகும்.

இந்தச் சொத்து மதிப்போடு அவர்கள் முதன்முறையாக 5ஆவது இடத்தைப் பிடித்து புதிய வரலாற்றைப் பதிவு செய்திருக்கின்றனர். அண்ணன் இயோ சோர் குடும்பத்தின் செம்பனை எண்ணெய் நிறுவனமான ஐஓஐ கார்ப்பரேஷன் செண்டிரியான் பெர்ஹாட்டையும் அவரின் தம்பி இயோ செங் ஐஓஐ புரோபர்ட்டிஸ் குரூப் பெர்ஹாட் நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.

அதேசமயத்தில் கடந்த அக்டோபரில் 100 வயதைத் தொட்ட வர்த்தக சக்கரவர்த்தி டான்ஸ்ரீ ரோபர்ட் குவோக் மொத்தம் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் (56 பில்லியன் ரிங்கிட்) சொத்து மதிப்புகளோடு தொடர்ந்து முதலிடத்தைப் வகிக்கிறார்.

மொத்தம் 8.8 பில்லியன் அமெரிக்க டாலர் (43 பில்லியன் ரிங்கிட்) சொத்து மதிப்புகளோடு ஹோங் லியோங் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் டான்ஸ்ரீ குவேக் லெங் சான் 2ஆவது இடத்தில் இருக்கிறார்.

பப்ளிக் வங்கியின் தே சகோதரர்கள் 5.4 பில்லியன்அமெரிக்க டாலர் (26 பில்லியன் ரிங்கிட்) சொத்துமதிப்புகளோடு 3ஆவது இடத்தில் உள்ளனர்.

அலுமினியம் தொழில்துறை ஜாம்பவான் டான்ஸ்ரீ கூன் போ தியோங் 5.3 பில்லியன் அமெரிக்க டாலர் (25.5 பில்லியன் ரிங்கிட்) சொத்து மதிப்புகளோடு 5ஆவது இடத்தில் இருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version