Home மலேசியா பள்ளத்தாக்கில் விழுந்து தீ பிடித்த கார் – அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய பயணி

பள்ளத்தாக்கில் விழுந்து தீ பிடித்த கார் – அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய பயணி

சிக்: ஜாலான் புக்கிட் செபலாவில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து தீப்பிடிக்கும் முன், ஒரு நபர் தனது வோக்ஸ்வாகன் கோல்ஃப் காரில் இருந்து தப்பினார். சிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர், உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் சுல்கைரி மாட் தஞ்சோல் கூறுகையில் 36 வயதான நபருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

அதிகாலை 1.53 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், மூத்த தீயணைப்பு அதிகாரி II சோஃபுவான் சப்ரி தலைமையிலான சிக் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் குழு ஏழு உறுப்பினர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அவர் கூறினார். காயமின்றி தப்பியவர் பெக்கான் சிக்கில் இருந்து பாலிங் நோக்கி தனியாக பயணித்திருந்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தீயை முழுமையாக  அணைத்தனர். தான் வாகனம் ஓட்டும் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக விளக்கினார். ஆனால் தான் சுதாரித்து கொண்டு காரில் இருந்து உடனடியாக வெளியேறியதாகக் கூறினார். இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் வோக்ஸ்வேகன் கோல்ஃப் கார், தீயினால் கிட்டத்தட்ட 90% அழிந்துவிட்டதாக சுல்கைரி கூறினார். இந்த வழக்கு விசாரணைக்காக காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கெடாவின் தடயவியல் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version