Home Top Story தெற்காசிய நாடுகளில் விற்கப்படும் செரலாக் உணவில் 30 விழுக்காடு கூடுதல் சக்கரையா?

தெற்காசிய நாடுகளில் விற்கப்படும் செரலாக் உணவில் 30 விழுக்காடு கூடுதல் சக்கரையா?

டெல்லி:

குழந்தைகளுக்கு வழங்கப்படும் செரலாக் உணவில் கூடுதலாக சர்க்கரை இடுபொருள் சேர்க்கப்படும் புகார் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தை இந்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அனைத்துலக குழந்தைகள் உணவுப் பொருள் கண்காணிப்பு அமைப்பு IPFAN இதுதொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் செரலாக் உணவுப் பொருளுடன் ஒப்பிடும்போது, இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் செரலாக் உணவில் கூடுதல் சர்க்கரை இடுபொருள்கள் இடம்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்த சர்ச்சை குறித்து வியாழக்கிழமை விளக்கமளித்த நெஸ்லே’இந்தியா நிறுவனம்,குழந்தைகள் உணவுப் பொருள்களில் எந்தவித சமரசமும் செய்துகொள்வதில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களில் வெவ்வேறு இடுபொருள்களின் அடிப்படையில், 30 சதவீதம் அளவுக்கு கூடுதல் சர்க்கரை அளவை நிறுவனம் குறைத்துள்ளது என்று தெரிவித்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version