Home Hot News KLIA’வில் குடிநுழைவு அதிகாரிகள் போல் நடித்து, வெளிநாட்டினரிடம் பணம் பறிப்பு

KLIA’வில் குடிநுழைவு அதிகாரிகள் போல் நடித்து, வெளிநாட்டினரிடம் பணம் பறிப்பு

சிப்பாங்:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) குடிநுழைவு அதிகாரிகளைப் போல் பாசாங்கு செய்து, வெளிநாட்டினரை மிரட்டிப் பணம் பறிக்கும் புதிய ஒரு பிரச்சினை தலைதூக்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்த மூசாடியிக்கு தெற்கு ஆசியாவிலிருந்து மலேசியாவுக்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொள்பவர்கள் குறிவைக்கப்படுவதாக அறியமுடிகிறது.

குறிப்பாக, பங்ளாதேஷ் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே இந்தக் கொடுமை இழைக்கப்படுவதாக ஊடகத்திடம் தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவுக்கு முதல்முறையாகப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தானிய ஆடவரை, விமான நிலையத்தில் இருந்த ஒருவர் மிரட்டிப் பணம் பறித்ததைக் காட்டும் பல காணொளிகள் டிக்டோக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version