Home ஆன்மிகம் மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர …..

மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு வர …..

மகாலட்சுமியே செல்வத்தை வழங்கக் கூடிய தெய்வம் என்பதால் மகாலட்சுமி வீட்டிற்கு வர வேண்டும், எப்போதும் நம்முடைய வீட்டில் நிலையாக தங்கி இருக்க வேண்டும், மகாலட்சுமியின் அருள் நமக்கு எப்போதும் கிடைக்க வேண்டும் என அனைவரும் நினைப்பதுண்டு. இதனால் மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமையில் வீட்டில் அனைத்து விதமான மங்கள விஷயங்களையும் செய்வது வழக்கம். ஆனால் மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு வரவழைக்க முதல் நாளான வியாழக்கிழமையில் என்ன செய்ய வேண்டும் என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.

வெள்ளிக்கிழமையில் நாம் விளக்கேற்றி பூஜை செய்யும் நேரத்தில் தான் மகாலட்சுமி நம்முடைய வீட்டிற்கு வருவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தெய்வங்கள் நம்முடைய வீட்டிற்குள் எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கும். குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை வேளையில் தெய்வங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் நம்முடைய வீட்டில் நாம் கடைபிடிக்கும் விஷயங்கள் தான் தெய்வ சக்தியை விரும்பி நம்முடைய வீட்டில் இருக்கச் செய்யும்.

வியாழக்கிழமையில் செய்ய வேண்டியவை :

வெள்ளிக்கிழமை என்பது செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி நம் வீடு தேடி வர வேண்டும் என்றால், முந்தைய நாளான வியாழக்கிழமையே நம் வீட்டில் சில விஷயங்களை செய்து வைக்க வேண்டும். எப்படி வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்க அவர்கள் வருவதற்கு முன்பே, வரவேற்க தயாராகி விடுவோமோ அதே போல் மகாலட்சுமியையும் வரவேற்கும் விஷயங்களை நாம் செய்து வைக்க வேண்டும்.

மகாலட்சுமியை வரவேற்க செய்ய வேண்டியவை :

* வீடு முழுவதையும் வியாழக்கிழமை அன்றே சுத்தம் செய்து, பூஜை அறையை சுத்தம் செய்து, வெள்ளிக்கிழமை பூஜைக்கு தயாராக வைக்க வேண்டும்.

* வெள்ளிக்கிழமை மகாலட்சுமி மனநிறைவோடு நம் வீட்டிற்கு வருகை தர, வியாழக்கிழமை அன்று இரவு மட்டும் அல்ல, தினந்தோறும் இரவு நேரத்தில் சமையலறையில் எச்சில் பாத்திரங்கள் கட்டாயம் இருக்கக்கூடாது. முடிந்தவரை எச்சில் பாத்திரத்தை சுத்தம் செய்துவிட்டு, அதன் பின்பு தூங்கச் செல்வது நம் வீட்டிற்கு நன்மையை தரும்.

சமையலறையில் செய்ய வேண்டியது :

* வியாழக்கிழமை அன்று சமையலறை, சமையல் மேடை மற்றும் அடுப்பை சுத்தம் செய்து மஞ்சள், குங்கும பொட்டை வைத்திருக்க வேண்டும். குறிப்பாக
அடுப்பு, உப்பு ஜாடி, அஞ்சறைப் பெட்டி, அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரம், அரிவாள்மனை அல்லது கத்தி. இந்த பொருட்களில் எல்லாம் கட்டாயம் மஞ்சள், குங்கும பொட்டு வைப்பது மிகவும் நல்லது. இதை தவிர்த்து உங்களுக்கு வேறு ஏதேனும் பொருட்களுக்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைக்க வேண்டும் என்று இஷ்டம் இருந்தால் நீங்கள் தாராளமாக வைத்துக் கொள்ளலாம்.

மகாலட்சுமியி விரும்பும் இடங்கள்:

* மகாலட்சுமி விரும்பி வாசம் செய்வதாக சொல்லப்படும் கல் உப்பு, அரிசி, பருப்பு, புளி போன்ற பொருட்கள் வைத்திருக்கும் பாத்திரத்திரம் எப்போதும் காலியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அவற்றை கழுவி சுத்தம் செய்வதாக இருந்தால் வியாழக்கிழமையே செய்து, மறுநாள் வரை காத்திருக்காமல் உடனடியாக அவற்றை நிரப்பி வைத்து விடுங்கள்.

* சமையல் அறையில் சமையலுக்காக பயன்படுத்தும் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் ஆங்காங்கே சிந்தி, சிதறி கிடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version