Home Top Story மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ படம் வெளியாவதில் சிக்கல்?

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ படம் வெளியாவதில் சிக்கல்?

நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே 1 அன்று கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அவர் நடித்த ‘மங்காத்தா’ படம் ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் சிக்கல் எழுந்துள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை கலக்கமடையச் செய்துள்ளது. மறு திரையீடு கலாச்சாரத்தை ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்பதற்கு சான்றாக இருக்கிறது

சமீபத்திய ரீ-ரிலீஸ் படங்களின் வசூல். படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன நிலையிலும், பலமுறை தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பானதை ரசித்த ரசிகர்கள், திரையரங்குகளிலும் ‘கில்லி’ ரீ-ரிலீஸைக் கொண்டாடி வருகின்றனர். படம் வெளியான சில நாட்களிலேயே ரூ. 12 கோடி வசூலைக் கடந்திருக்கிறது கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது. புதுப்படங்களுக்கு இணையாக ரீ-ரிலீஸ் படங்களின் வசூலும் மாஸ் காட்டி வருகிறது.

இந்த வரிசையில் நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்காக மே 1 அன்று அவர் நடித்த ‘மங்காத்தா’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2011இல் வெளியான இந்தப் படத்தில் நீண்ட நாட்கள் கழித்து நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் நடிகர் அஜித். திரை வாழ்க்கையில் சிறிய பின்னடைவைச் சந்தித்த நடிகர் அஜித்துக்கு மங்காத்தா படம் பெரும் ‘கம்பேக்’காக அமைந்தது. அதற்கு காரணம் அஜித்தின் கதாபாத்திரமும், பின்னணி இசையும் தான். கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்கள் எல்லாம் வில்லனாக கொண்டாட வைத்த படம் மங்காத்தா. அஜித் வரும் காட்சிகள் முழுவதும் பின்னணி இசையில் யுவன்சங்கர் ராஜா அதிர வைத்திருப்பார். இன்றைக்கும் மங்காத்தா படத்தின் பின்னணி இசைக்கு பெரும் ரசிகர்கள் உண்டு.

‘கில்லி’ ரீ-ரிலீஸ் வசூலில் கெத்து காட்ட, ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸுக்கு அஜித் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், இப்போது ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. ‘மங்காத்தா’ படத்தை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தயாநிதி அழகிரி, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி, தற்போதும் சிகிச்சையில் இருக்கிறார். இந்நேரத்தில் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் கொண்டாட்டங்கள் அவசியமா?’ என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version