Home மலேசியா MOH அனுமதியின்றி அழகு சாதனப் பொருட்கள் ஆன்லைனில் விற்பனை: இந்தோனேசியர்கள் கைது

MOH அனுமதியின்றி அழகு சாதனப் பொருட்கள் ஆன்லைனில் விற்பனை: இந்தோனேசியர்கள் கைது

புத்ராஜெயா: சுகாதார அமைச்சகத்தின் (MOH) அனுமதியின்றி ஒப்பனை மற்றும் அழகு சாதனப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்த 50 வயது இந்தோனேசியப் பெண்ணை குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது. இயக்குனர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோஹ், கடந்த வியாழன் அன்று கோலாலம்பூர் ஸ்தாப்பாக் மற்றும் அம்பாங் ஆகிய இடங்களில் நடந்த சோதனையின் போது 25 மற்றும் 35 வயதுடைய இந்தோனேசியர்கள் ஒரு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.  பல்வேறு பிராண்டுகளான ஒப்பனை மற்றும் அழகு சாதனப் பொருட்கள், இரண்டு இந்தோனேசிய கடவுச்சீட்டுகள் ரிங்கிட் 3,263 ரொக்கம் மற்றும் இந்தோனேசிய ரூபியா 3.3 மில்லியன் ஆகியவற்றையும் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெண் செல்லுபடியாகும் சமூக வருகை அனுமதிச்சீட்டை வைத்திருந்தார். ஆடவரிடம் மலேசியாவில் இருப்பதற்கான செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது கடப்பிதழ் இல்லை. மேலும் அந்த நபர் அதிக காலம் தங்கியிருந்தார் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) ஒரு அறிக்கையில் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைத்து வெளிநாட்டவர்களும் குடிநுழைவுச் சட்டம் 1959/63, க்டப்பிதழ் சட்டம் 1966, மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றின் கீழ் குற்றங்களைச் செய்துள்ளதாகவும், தற்போது சிலாங்கூரில் உள்ள Semenyih குடிவரவு டிப்போவில் போதைப்பொருள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் கட்டுப்பாட்டின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ரஸ்லின் கூறினார்.

புத்ராஜெயா குடிநுழைவுத் தலைமையகத்தின் புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் கோலாலம்பூர் சுகாதாரத் திணைக்களத்தின் மருந்தக அமலாக்க அதிகாரிகளின் குழுவை உள்ளடக்கிய புகார்கள் மற்றும் மூன்று வார கண்காணிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version