Home விளையாட்டு குஜராத்துடன் நாளை மீண்டும் மோதல்: நெருக்கடியில் சி.எஸ்.கே.

குஜராத்துடன் நாளை மீண்டும் மோதல்: நெருக்கடியில் சி.எஸ்.கே.

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 6 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது.
இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி ( மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதரா பாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது போட்டியில் குஜராத் டைட்டன்சை நாளை (10-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. குஜராத்தை மீண்டும் வீழ்த்தி 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி பேட்ஸ்மேன் ஷிவம் துபே கடந்த 2 ஆட்டத்திலும். டக்அவுட் ஆனார். இதனால் நாளைய முக்கியமான ஆட்டத்தில் அவர் தனது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார்.அவர் 1 சதம், 4 அரை சதத்துடன் 541 ரன் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version