Home மலேசியா 24 மணி நேர உணவகம் தேவைப்படுபவர்களாக மட்டுமே: ஜவஹர் அலி

24 மணி நேர உணவகம் தேவைப்படுபவர்களாக மட்டுமே: ஜவஹர் அலி

பிரெஸ்மாவின் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் நடைபெறுகிறது. இந்த விருந்து உபசரிப்பில் மக்களவை சபாநாயகர் ஜோஹாரி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுடன் 2,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விருந்து உபசரிப்பில் மலேசியாவில் உள்ள அனைத்து  பராம்பரிய உணவுகளும் பரிமாறப்பட்டன.

பிரெஸ்மாவின் அழைப்பை ஏற்று இந்த திறந்த இல்ல உபசரிப்பிற்கு சிறப்பு விருந்தினராக  மக்களவை சபாநாயகர் ஜோஹாரி வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்ததாகத் தெரிவித்தார்.

 

 திறந்த இல்ல உபசரிப்பின்போது பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலியிடம் 24 மணி நேர உணவகம் இயங்குவது குறித்து கேட்டபோது நாங்கள் 24 மணி நேர உணவகத்தை சேவை அடிப்படையில் வழங்கி வருகிறோம் என்றே சொல்ல வேண்டும். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது பசியோடு வருபவர்களுக்கு உணவினை வழங்கி வருகிறோம்.

பினாங்கு பயனீட்டாளர்கள் கூறுவது போல் 24 மணி நேர உணவகத்தால் உடல் பருமன் பிரச்சினை உள்ளிட்டவைகளுக்கு வழி வகுப்பதாக கூறுவது ஏற்புடையதல்ல அல்ல என்றும் ஜவஹர் அலி தெரிவித்தார். இரவு வேலை செய்பவர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமே உணவருந்த வருகின்றனர் என்றார்.

மேலும் 24 மணி நேரம் உணவகத்தை நடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. வேலையாட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் வேளையில் இது போன்ற கருத்துகள் வருத்தத்தை அளிப்பதாக  தெரிவித்தனர்.

இதற்கிடையே எங்களின் பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க மனித வள அமைச்சர் சந்தித்து எங்களின் பிரச்சினையை எடுத்துரைத்ததாகவும் விரைவில் மீண்டும் சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version