Home வணிகம் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அரசாங்கம் தனிக் கவனம்

தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அரசாங்கம் தனிக் கவனம்

தோட்டத் தொழிலாளர்களின் நலனை  அரசாங்கம் பேணிக்காக்கும் அதனால்தான்  மாநிலத் தோட்ட தொழிற்சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார்  மாநில இஸ்லாம் அல்லாத பிரிவில் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் அவர் மூலம்  கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு  சுலபமான முறையில் தீர்வு காணப்படும்   என்று மாநில இஸ்லாம் அல்லாத ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநில தேசியத் தோட்டத் தொழிற் சங்கத்தின் 19ஆவது மூன்றாண்டு பிரதிநிதிகள் மாநாடு போர்ட்டிக்சன் ஜாலான் பந்தாய் 5 ஆவது மைலில் அமைந்துள்ள கோல்ப் இன் கன்ட்ரி கிளப்பில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அருள்குமார் உரையாற்றினார்.

உள்நாட்டு  வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 23,400 தொழிலாளர்கள் தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் நலனில் அக்கரைக் கொண்டு அண்மையில் மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்துத் தோட்ட நிர்வாகத்துடன் சந்திப்பை ஏற்பாடு செய்து, அதில் தோட்டத் தொழிலாளர்களின் நலன் பற்றியும் தோட்டத்தில் அமைந்துள்ள ஆலயங்கள்,  தமிழ்ப்பள்ளிகள் குறித்தும்  விவாதிக்கப்பட்டது.

இன்றைய நிலையில் தோட்டங்களில் மாடுகள் வளர்ப்பதற்குத் தோட்ட நிர்வாகம் பல எதிர்ப்புகளைத் தெரிவித்தாலும்  தோட்ட நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது.தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் மாடுகள் மிகவும் குறைவு. ஆனால், தோட்டத்தில் வேலை செய்யாதவர்கள்தான் அதிகமாக மாடுகள் வைத்துள்ளனர். அவர்கள் தோட்டத்தில் வேலை செய்பவர்களிடம் அந்த மாடுகளை ஒப்படைத்துள்ளனர் என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

அண்மையில் கெர்பி தோட்டத்தில் கால்நடைகள் வளர்ப்பதற்குத் தோட்ட நிர்வாகம் அனுமதி வழங்காமல் தொழிலாளர்களின் வளர்ப்புக் கொட்டகைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கிய போது, அதற்கு தேசிய தோட்ட தொழிற்சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் பி.குணா, மாநில மனிதவள அமைச்சின் இயக்குநர் தர்மராஜன் மூலம் சுமுகத் தீர்வு காணப்பட்டது.

தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புத் திட்டம் தனமேராவில் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கிறது. கட்டப்பட்டு அடுத்த ஆண்டு ஜ௰லை    மாதம் கட்டி முடிக்கப்படும் என்று ஜ.அருள்குமார் கூறினார். அதேபோல் கெர்பி தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புத் திட்ட மும் மாநில அரசாங்க மூலம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார் அருள்குமார்.  மாநிலப் பிரதிநிதிகள் மாநாட்டில் மறைந்த தோட்டத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு காப்புறுதி மூலம் இரண்டு குடும்பங்களுக்கு தொழிற்சங்கத்தின் காசோலைகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்குக் கல்வி ஊக்குவிப் புத் தொகையும் பெற்றோர் ஒருவருக்கு சிறப்பும் ஙெ்ய்யப்பட்டது.

இந்த மாநாட்டில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணா, தேசிய தோட்ட தொழிற்சங்கத்தின் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன், தேசிய தோட்டத் தொழிற்சங்கத்தின் தேசியத் தலைவர் அப்துல் சமாட்,தேசிய தோட்டத் தொழிற்சங்கத்தின் பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version