Home மலேசியா புகை மூட்டம் : 24 பகுதிகளில் ஆரோக்கியமற்ற ஐ.பி.யு. குறியீடு

புகை மூட்டம் : 24 பகுதிகளில் ஆரோக்கியமற்ற ஐ.பி.யு. குறியீடு

கெடா, பினாங்கு, பேராக், மலாக்கா, ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய தீபகற்ப மாநிலங்களில் காற்று மாசுபாடு குறியீட்டு (ஐ.பி.யு.) வாசிப்பு மிதமானவையிலிருந்து ஆரோக்கியமற்ற நிலையை (101-க்கும் மேல்) அடைந்துள்ளது.

மலேசியக் காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (ஏ.பி.ஐ.எம்.எஸ்.) போர்ட்டல்-ன் படி, இன்று காலை 10 மணி நிலவரப்படி, மொத்தம் 24 நிலையங்களில் ஐ.பி.யு. அளவீடுகள் ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில், சிலாங்கூரில் உள்ள ஜோஹான் செத்தியா, கிள்ளான், ஆரோக்கியமற்ற மிக மோசமான ஐ.பி.யு. (209) அளவீடுகளைப் பதிவு செய்துள்ளது.

சிலாங்கூரில் மேலும் 5 இடங்களில் மோசமான ஐ.பி.யு. பதிவாகியுள்ளது. அவை, கோல சிலாங்கூர் (104), பெட்டாலிங் ஜெயா (139), ஷா ஆலாம் (135), கிள்ளான் (128) மற்றும் பந்திங் (123) ஆகும்.

மேலும், நெகிரி செம்பிலானில், நீலாய் (126), சிரம்பான் (105) மற்றும் போர்ட்டிக்சனில் (102); மலாக்காவில் புக்கிட் ரம்பாய் (102, மலாக்கா மாநகரம் (105); கோலாலம்பூரில் பத்து மூடா (152) மற்றும் செராஸில் (144); ஜொகூரில் செகாமாட் (104) மற்றும் தங்காக்கில் (113); புத்ராஜெயாவில் (140) பஹாங், ரொம்பினில் (161) –ஆகவும் காற்று மாசு குறியீடு பதிவாகியுள்ளது.

ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கும் மற்றப் பகுதிகள் : பினாங்கில், மின்டன் (113), பாலேக் புலாவ் (111) மற்றும் செப்ராங் ஜெயா (105); பேராக்கில், தாசேக் ஈப்போ (117), பெகோ (101) மற்றும் ஶ்ரீ மஞ்சோங் (124); கெடாவில், சுங்கை பட்டாணி (109) மற்றும் கூலிம் ஹை-டேக் (108) ஆகும்.

இதற்கிடையில், தீபகற்ப மலேசியா, சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் மொத்தம் 43 பகுதிகளில் மிதமான ஐ.பி.யு. அளவீடுகளைப் பதிவு செய்துள்ளன.

0 முதல் 50 வரையிலான ஐ.பி.யு. வாசிப்பு ஆரோக்கியமானது, 51 முதல் 100 மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 வரை அதிக ஆரோக்கியமற்றது, 300 மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை என வரையறுக்கப்பட்டுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version