Home Hot News தப்ளிக் சமய மாநாட்டில் பங்கேற்ற ஒருவரால் ஐந்து பேர் பாதிப்பு – சுகாதார...

தப்ளிக் சமய மாநாட்டில் பங்கேற்ற ஒருவரால் ஐந்து பேர் பாதிப்பு – சுகாதார அமைச்சு தகவல்

பெட்டாலிங் ஜெயா:
கடந்த மாதம் ஶ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த தப்ளிக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபரால் ஐந்து பேருக்கு கோவிட் -19 தொற்று ஏற்படும் என்பதனை சுகாதார அமைச்சகம் கண்டறிந்துள்ளது.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோஶ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், தப்ளிக் சமய மாநாட்டில் பங்கேற்றவர்களால் 711 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.
நாங்கள் தப்ளிக் சமய மாநாட்டில் பங்கேற்றவர்களை பார்த்தால், 711 குறியீட்டு சம்பவங்கள் உள்ளன. மேலும் இந்த தொற்று அவர்களின் குடும்பங்களுக்கு பரவுகின்றன, அவை முதல் தலைமுறையாகும்.
அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தங்கள் அண்டை வீட்டினர் பாதிக்கிறார்கள், இந்த அண்டை வீட்டினரால் அவர்களின் நண்பர்கள் பாதிக்கிறார்கள். ஒரு நபரால் ஐந்து பேருக்கு தொற்று நோய் பரவுவதைக் கண்டோம். மற்றொரு நபரைத் தொடும் ஒவ்வொரு நபரும் ஐந்து பேருக்கு அந்த தொற்றினை வழங்க வாய்ப்பு உள்ளன என்று கோவிட் -19 நிலைமை குறித்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்
நாட்டிலுள்ள அனைத்து கோவிட் -19 சம்பவங்களில் 55% அல்லது இதுவரை 2,031 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. இதுவரை நோயுடன் தொடர்புடைய 23 இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை சமய நிகழ்ச்சியுடன் தொடர்புடையவையாகும்.
இந்த ஆண்டு பிப்ரவரி 27 முதல் மார்ச் 3 வரை நடந்த தப்ளிக் கூட்டத்தில் சுமார் 16,000 பேர் கலந்து கொண்டனர், அவர்களில் 1,500 பேர் 25 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களாவர்.
தப்ளிக் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் நெருங்கிய தொடர்புகளை நாங்கள் எவ்வாறு அடையாளம் காணப் போகிறோம் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும். முதலாவது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இரண்டாவது அவர்களது நண்பர்கள். இந்த விசாரணை சிக்கலானது மற்றும் நேரம் எடுக்கும் என்று டாக்டர் ஹிஷாம் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version