Home இந்தியா ‘வைரசை பரப்புங்கள்’ பேஸ்புக்கில் கருத்து

‘வைரசை பரப்புங்கள்’ பேஸ்புக்கில் கருத்து

‘பொது இடங்களுக்கு சென்று முகத்தை மூடாமல் தும்மி வைரசை பரப்புங்கள்’ என பேஸ்புக்கில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

நாடு முழுவதும் 748 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. மேலும், இந்த வைரசுக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருபவர் முஜீப் முகமது.

இவர் தனது சமூகவலைதள பக்கமான பேஸ்புக்கில், ” கைகோர்ப்போம், வீடுகளை விட்டு வெளியே பொது இடங்களுக்கு சென்று முகத்தை மூடாமல் தும்முவோம். வைரசை பரப்புவோம்” என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். அவரது கருத்து சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது.

இதையடுத்து, சமூக வலைதளத்தில் வைரஸ் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த சாப்ட்வேர் இன்ஜினியர் முகமது மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version