Home Hot News கொரோனாவா? மூன்றாம் உலகப் போரா?

கொரோனாவா? மூன்றாம் உலகப் போரா?

கொரோனாவா? மூன்றாம் உலகப் போரா?

கோலாலம்பூர், ஏப்ரல் 1-

உலகம் முழுவதும் உள்ள 198 நாடுகளை பாதித்துள்ள கொரோனா கிட்டத்தட்ட மூன்றாம் உலகப் போருக்கு நிகரான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளுக்கும் ஜனநாயக சித்தாந்தங்களுக்கு முற்றிலும் எதிர்மறையிலான கம்யூனிச நாடுகளுக்கும் மூண்ட் இரண்டு உலகப் போர்களுக்கு நிகராக கொரோனாவுக்கு எதிரான யுத்தம் உள்ளது.

கம்யூனிச நாடான சீனாவிலிருந்து புறப்பட்ட கொரோனா இதர கம்யூனிச நாடுகளை சேதப்படுத்தாமல் கண்ணியம் காப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

வட கொரியாவுக்கு பெரிய அளவில் சேதம் கிடையாது. இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுக்கு குறைந்த அளவிலான சேதமே உள்ளது.

அமெரிக்காவின் பரம எதிரியான கியூபா, கொரோனா பற்றிய கவலையின்றி கிடக்கிறது.

ரஷ்யாவுக்கும் கொரோனாவால் பெரும் பாதிப்பு கிடையாது.

இத்தாலி நேரிடையாக வூஹான் நகரோடு ஜவுளித் தயாரிப்பில் இருந்ததால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நேச நாடுகள் கொரோனாவால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன.

உலக நாடுகளில் முதலீடு செய்து வரும் சீனா தனது உள்நாட்டுச் சந்தையை திறந்து விட வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து வந்ததை சீனா விரும்பவில்லை.

தனது ஹூபே மாகாணத்தை நிர்பந்தம் காரணமாகத் திறந்து விட்ட சீனா இதே ஹூபே மாகாணத்தில் உருவாக்கி விட்டதுதான்  இந்தக் கொரோனா.

விட்டால் போதும் என்று மேற்கத்திய முதலீட்டாளர்கள் ஹூபே மாகாணத்தை விட்டு வெளியேறி விட்டார்கள்.

சீனாவின் கொரோனா திட்டம் வெற்றி பெற்றது.

இப்போது உலக நாடுகளை பதம் பார்த்து வரும் கொரோனா சீனாவில் சுத்தமாக இல்லையாம்.

கம்யூனிச ரஷ்யாவிலும் கம்யூனிச கியூபாவிலும் கம்யூனிச வட கொரியாவிலும் மேலோட்ட ஆட்டம் மட்டுமே ஆடி வருகிறது கொரோனா.

நடந்து கொண்டிருப்பது மூன்றாவது உலக யுத்தமோ என்ற சந்தேகத்தை சீனா தொடர்ந்து கிளப்பிக் கொண்டே வருகிறது.

உலக பொருளாதாரத்தை நிர்ணயித்து வரும் இலுமினாட்டி குழுமத்தோடு இணைந்து சீனா அரங்கேற்றியிருப்பதே இந்த கொரோனா யுத்தம் எனவும் மூன்றாம் உலகப் போரும் இனி வரும் உலகப் போர்களுக்கும் இந்த கொரோனாவே முன்னோடி எனவும் கணிக்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version