Home Hot News கனடா துப்பாக்கி சூடு பலி எண்ணிக்கை உயர்வு; பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண்...

கனடா துப்பாக்கி சூடு பலி எண்ணிக்கை உயர்வு; பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண் போலீஸ்

உயிர் இழந்த பெண் போலீஸ்

என்பீல்டு,ஏப்ரல் 20-

கனடா நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். போலீஸ் போல் உடையணிந்து வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய கேப்ரியல் வோர்ட்மேன் என்பவரை போலீசார் சுட்டு கொன்றனர். தற்போது இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்து உள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு கொரோனா லாக்டவுனில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் 23 வயதான பெண் காவலர் ஹெய்தி ஸ்டீவன்சன் என்ற பெண் போலீசும் பலியாகி உள்ளார்.ஹெய்டி அங்கு வந்துள்ளார்.

மக்களின் உயிரை காப்பாற்ற தாக்குதல் நடத்தியவரை எதிர்த்து அவர் போராடி உள்ளார். அப்போது தான் ஹெய்டி சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஹெய்டியின் மரணம் அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பலரின் உயிரை காப்பாற்ற தனது உயிரை தியாகம் செய்த அவர் கனடாவின் ரியல் ஹிரோ என பலரும் சமூகவலைதளங்களில் புகழாரம் சூட்டியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version