Home மலேசியா நீங்கள் ‘சிறப்பு’ என்று நினைக்க வேண்டாம்!

நீங்கள் ‘சிறப்பு’ என்று நினைக்க வேண்டாம்!

மகாதீர் முகமட்

பெட்டாலிங் ஜெயா, ஏப் 20-

மற்றவர்களை விட நீங்கள் சிறப்பு என்று நினைக்க வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இயக்க கட்டுப்பாட்டு ஒழுங்கை மீறியவர்களைச் சாடுகிறார்.

அரசாங்க பதவியில் இருப்பவர்களில் சிலர் மக்கள் நடமாட்டக் கடுப்பாட்டை மீறும் போது , மற்றவர்களை விட மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்று கருதுகின்றனர்.

அரசாங்கத்தில் இவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும், இவர்கள் உருவாக்கிய விதிகளை மக்கள் போலவே பின்பற்ற வேண்டும், ஆனால், அவர்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள்’ என்று நினைத்துக்கொள்கின்றனர்.

மலேசியாவில், நாங்கள் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றுகிறோம். சட்டங்கள் பாகுபாடு காட்டாது. மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு விதிகள் சட்டங்களை அடிப்படையாகக் கொண்டவை, அவை அனைவருக்கும் பொதுவாகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

ஸ்ரீ கெம்பங்கனில் உள்ள தனது வீட்டில் இருந்து ஒரு வீடியோ செய்தியில் பேசிய டாக்டர் மகாதீர், பெரிகாத்தான் நேஷனல் அரசாங்கத்தில் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்பான குற்றப்பதிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்படி அவர்கேட்டுக் கொள்ளப்பட்டார்.

சமீபத்திய வழக்கு, துணை சுகாதார அமைச்சர் நான் டத்தோ ஶ்ரீ டாக்டர் நூர் ஆஸ்மி, பேராக் மாநிலஆட்சிக்குழு உறுப்பினர் ரஸ்மான் ஜக்காரியா ஆகியோர் லெங்கொங்கில் உள்ள ஒரு தஃபிஸில் மாணவர்கள் உட்பட சுமார் 30 பேருடன் உணவு உண்ட காட்சி வைரலானது.

இதற்கு முன், மற்றவர்கள் திரெங்கானு மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சூரி மொக்தார், தனது முன்னோடி டத்தோஶ்ரீ அஹ்மத் சையத்தை அவரது வீட்டில் பார்க்க ஏன் சென்றார் என்றும் கேள்வி எழுப்பினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version