Home சினிமா பிரபல இயக்குநரை அதிர வைத்த கஜோல்

பிரபல இயக்குநரை அதிர வைத்த கஜோல்

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர் கான், மாதவன், கரீனா கபூர், ஷர்மான் ஜோஷி, போமன் இரானி உள்ளிட்டோர் நடித்த 3 இடியட்ஸ் படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அந்த படத்தில் ஆமீர் கான் ஜோடியாக கரீனா கபூர் நடித்திருந்தார். அவரின் நடிப்பும் பாராட்டப்பட்டது. ஆனால் கரீனா நடித்த பியா கதாபாத்திரத்திற்கு முதலில் கஜோலை தான் தேர்வு செய்தாராம் ராஜ்குமார் ஹிரானி.

3 இடியட்ஸ் படக் கதையை கஜோலிடம் கூற அவரோ ஒரு கன்டிஷன் போட்டு ராஜ்குமார் ஹிரானியை அதிர வைத்துவிட்டார். இது குறித்து கஜோல் முன்பு கூறியது பற்றி தற்போது பேசப்படுகிறது.

ராஜ்குமார் ஹிரானி ஸ்க்ரிப்ட்டுடன் என்னை பார்க்க வந்தபோது ஆமீர் கான் கதாபாத்திரத்தை கொடுத்தாலோ அல்லது மற்ற இருவரின்(மாதவன் அல்லது ஷர்மான் ஜோஷி) கதாபாத்திரத்தை கொடுத்தாலோ நடிக்கிறேன் என்றாராம்.

அந்த படத்தில் என் கதாபாத்திரத்திற்கு பெரிதாக வேலையே இல்லை. அந்த படத்தில் நடித்தால் நான் சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன் என்றார்.

தன் இமேஜுக்கு பியா கதாபாத்திரம் ஒத்துவராது என 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் கஜோல். அதன் பிறகே பியாவாக கரீனா நடித்தார். கரீனா கபூர் ஆமீர் கானுக்கு ஜோடியாக நடித்த முதல் படம் இது தான்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version