Home மலேசியா ஐ.நா கூட்டம் அசராது!

ஐ.நா கூட்டம் அசராது!

வரும் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாட்டுச் சபையின் 75 ஆவது பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இம்முறை மாறுபட்ட கூட்டமாகவே இது இருக்கும்.

ஐக்கிய நாட்டுச் சபைக்கூட்டம் என்பது கூடினோம் கலைந்தோம் கூட்டமல்ல. நாட்டின் பிரச்சினைகள், செயல்முறைகள் பற்றிய விளக்கங்கள், திட்டங்கள் ஒற்றுமை வேற்றுமை, பகைமை என்றெல்லாம் பேசப்படும். அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கான சஙகம இடமாகும்.

உறுப்பியம் பெற்ற பல நாடுகள் இதில் கலந்து கொள்ளக்கூடிய இடமாக நியூயார்க் அமைந்திருக்கிறது என்பதால் அமெரிக்காவில் கூடும் 75 ஆவது கூட்டத்தில் கூடல் இடைவெளி முதன்மையாக இருக்க வேண்டும். இகூட்டத்தில் பல இருக்கைகள் காலியாகவே இருக்கும்.

தொற்று நோய் அமெரிக்காவை மிகவும் நேசிக்கிறது போலும். அங்கேயே அதிகமாக வாசம் செய்வதால் உலகத் தலைவர்களின் வருகை அதிகமாக இருக்காது என்றும் பேசப்படுக்கிறது. இதில் முக்கியமாக சீனா கலந்துகொள்ளுமா என்பது மாபெரும் கேள்வியாக உருவெடுத்திருக்கிறது.

ஐ.நாவில் அமெரிக்க இனக்கலவரம் பேசப்படும் என்பதால் பேச்சின் தாக்கம் கடுமையகவும் இருக்கலாம். அதே வேளை சீனாவின் வுஹான் மாநில கோவிட் உற்பத்தி பற்றிய வாதங்களும் இடம்பெற்று உச்சமடையும். இதனால சீனத்தலைவர் கலந்துகொள்வாரா என்பதும் கேள்வியே!

ஆனாலும்,  பல நாட்டுத்தலைவர்கள் ஐ.நாவில் கூட மாட்டார்கள் என்றாலும் ஐ.நா பொதுச்பைக்கூட்டம் செப்டம்பரில் நடக்கும் என்பதில் மாற்றமில்லை என்கிறது ஐ.நா.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version