Home மலேசியா கள்ளக்குடியேறிகள் லஙகாவிக்குக் குறி

கள்ளக்குடியேறிகள் லஙகாவிக்குக் குறி

சுற்றுலாத்துறை திறந்துவிடப்பட்டிருக்கிறது. இது மகிழ்ச்சியான செய்தி. சுற்றுலாப் பகுதிகளில் இப்போது அதிகமாப் பேசpபடுவது லங்காவித்தீவு. லங்காவி சுற்றுலா என்பது பிரத்தியேகமானது. அங்கு செல்ல வேண்டும் என்பதே பலரின் ஆர்வமாக இருக்கிறது. ஆர்வத்திற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

ஃபெர்ரி படகும் சுகமான அனுபவத்தைத்தரும். குழந்தைகள் பெரிதும் விரும்புவர். இம்முறை சுற்றுலா செல்லும்போது கவனம் என்பதில் கவனமாக இருக்க வேண்டியிருக்கும்.

ரோஹிங்கியா கள்ளக்குடியேறிகள் லங்காவியைத்தான் குறிவைத்து நுழைகிறார்கள். நுழைந்திருக்கிறார்கள். இவர்கள் மருத்துவக் கண்களில் படாமல் பதுங்கியும் இருப்பதாக நம்பப்படுகிறது.

இவர்களால் சுற்றுப்பயணிகளுக்கு பிரச்சினை எழும். தொற்றுக்கும் இவர்களும் காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது. அதிகமாக நுழையும்
இவர்களைக் கண்காணிக்க ட்ரோன் எனும் வான் மிதவையைப் பயன்படுத்துமாறு கூறப்பட்டிருக்கிறது.

ஹெலிகாப்டர் பயன்படுத்துவதைக் காட்டிலும் ட்ரோன் வகைகளைப் பயன்படுத்துவது மிக எளிதானது, சுலபமானது.

இவ்வகை ட்ரோன்களை தளங்கள் அமைத்து பயன்படுத்தினால். கள்ளக்குடியேறிகளை எளிதில் மடக்கிவிடலாம்.

லங்காவிக்குள் நுழைவதற்கு பல ரோஹிங்யா படகுகள் காத்திருப்பதாவும் கூறப்படுகிறது. ட்ரோன் போன்ற நவீன தொழில் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட இவற்றைப் பயன்படுத்தலாம்  என்று உயர் அதிகாரிகள் தெரிவித்திருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version