Home மலேசியா கடல்தாண்டும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

கடல்தாண்டும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

பள்ளிகள் தொடங்க விருக்கின்றன. இதற்கு  ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண்டும். முன்பெல்லாம் தயார் என்றால் இறுதி நேரம் போதும். இப்போது அப்படியில்லை. இறுதி நேரம் என்பது 14 நாட்கள் என்ற ஞாபகம் எப்போதும் இருக்கவேண்டும். இதுதான் இறுதி நேரம்.

உள்நாட்டில் எல்லை விட்டு எல்லை தாண்டும் கெடிபிடிகள் தளர்த்தப்பட்டுவிட்டன. பேருந்துகள் நிரம்பத் தொடங்கிவிட்டன, இடைவெளி சுருங்கிவிட்டன.

வேலிதாண்டுவதில் வேகமாக கார்கள் புறப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால், கடலைத் தாண்டுவதிலும், வானத்தைப் பின்னோக்கித் தள்ளுவதிலும் சிரமங்கள் இருக்கின்றன. சபா,சரவாக், லாபுவான் செல்லும் ஆசிரியர்கள் இறுதி நேரம் எதுவென்று தெரிந்து, 14 நாட்களுக்குமுன் தயாராகிவிட வேண்டும்.

கடல்தாண்டி செல்கின்றவர்கள் மூன்று நாட்களுக்கு முன்பே சோதனை செய்துகொள்ள வேண்டுமென்று கட்டளையிடப்பட்டிருக்கிறது. அதே வேளை 14 நாட்கள் சுய தனிமை செய்துகொள்ளவும் வேண்டும்.

தனிமைப் படுத்தப்பட்டதற்கு அடையாளச்சான்றாக கையணி (rubber band) அணிந்திருக்க வேண்டும்.

10 ஆவது நாளில்தான உள்ளூர் பயணங்களில் ஈடுபடவேண்டும் என்று உணர்த்தப்பட்டிருக்கிறனர். அப்போது அவர்களுக்கு எதிர்மறை அறிகுறி இல்லாமல் இருக்க வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version