Home மலேசியா செல்லும் இடமெங்கும் கல்வி

செல்லும் இடமெங்கும் கல்வி

ஒன்றைச் செய்வதில் மனத்திடத்தை ஒருநிலைப் படுத்திகொண்டால் சாதகமான சூழல் பெரிதாக இருக்காது. உதாரணமாக பரீட்சையில் தேர்வு எழுத வேண்டும், வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியான எண்ணம் அமைந்துவிட்டால் தெருவிளக்கும்  திறமைக்கு உதவும்.

அமெரிக்க அதிபராக இருந்த ஆப்ரஹாம் லிங்கன் பற்றி அறிந்தவர்கள் அதிகம். அவருக்கு கல்விமேல் அலாதி பிரியம். கல்வி கற்க வீட்டில் மின் வசதி இல்லை. தெருவில் படித்து தேர்வு எழுதியவர் என்று அறிந்த கதை ஒன்று ஒரு வரலாறாக இருக்கிறது. அதிபராகவும் அவரை மாற்றியது.

அந்த நினைவுகளை இன்றைய அமெரிக்க அதிபர் மறக்கடிக்கச் செய்திருக்கிறார்.காரணம் கற்றபடி அவர் ஆட்சி செய்ய மறந்துவிட்டார். இருத்தாலும் அந்த நினைவுகளை மீள்பார்வைக்குக் கொண்டுவந்திருக்கிறார் ஒரு மாணவி.

அவரின் இந்த யுக்தி ஒரு கின்னஸ் சாதனை. அவர் வாழ்ந்த பகுதியில் இணையத்தொடர்பு கிடைக்கவில்லை. பரிட்சை எழுதியாக வேண்டும். இதற்கு யாராலும் உதவ முடியவில்லை. உதவும் எண்ணம் இருந்தாலும் அவர்களுக்கும் இணையத் தொடர்பு இல்லை.

அவருக்கு ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. அதற்கு பலரும் கை கொடுத்திருக்கிறார்கள் என்பது யூகமாக இருந்தாலும் உண்மையாகவும் இருக்கலாம் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

சபா பல்கலைக்கழக மாணவியான அவர், குன்றின் மீதுள்ள மரத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட மூங்கில் பரண்மீது அமர்ந்து, இணையத்  தொடர்பை அமைத்துக் கொண்டார். குன்றின் மரம் அவருக்குக் கைகொடுத்தது. இணையம் இறைவனாகத் தெரிந்தது. பரீட்சை எழுதினார்.

ஒருநாள் முழுவதும் அவர் அங்குதான் இருந்திருக்கிறார் என்பது வீரத்தைக் குறிக்கிறது. அவர் தனியாகச் செய்திருக்க முடியாது. அவரின் குடும்பத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இதைச்செய்திருக்கவும் முடியாது. குடும்பத்தின் உதவி மிக அவசியம்.

சாக்குப்போக்கு என்பது கல்விக்கான பண்பல்ல என்பதற்கு உதாரணமாக இருக்கும் அப்பெண்ணை இனம்பாராமல் பாராட்லாமே. அவரை ஆப்ரஹாம் லிங்கனுக்கு ஒப்பிடலாமா!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version