Home மலேசியா பணியாளர்களுக்கு நெறுக்குதல் இல்லை!

பணியாளர்களுக்கு நெறுக்குதல் இல்லை!

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளியில் வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதித்த நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அலுவலகத்திற்கு வந்து பணியாற்றும் பணிப்பது அவர்களின் இணக்கத்தைப்பொறுத்ததாகும் என்கிறார். எம் இ எஃப் எனும் அமைப்பின் தலைவர் டத்தோ ஷம்சுடின் பார்டான்.

அவர்களை வற்புறுத்துவது இயலாது. அவர்களின் அணுக்கமான இணக்கத்தைப்பெறுவது முக்கியம்.  நடைமுறைச் சூழல் இன்னும் இயல்பு நிலைக்கு முற்றாக மாறவில்லை. அதோடு அலுவலகச்சாதகம் தயார் நிலையில் இருக்கிறதா என்பதிலும் முழுமை இல்லை.

குறிப்பாக, சமூக இடைவெளிக்கான் ஏற்பாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். சில நிறுவனங்கள் அலுவலகப்பணிகளுக்குத் தயாராக இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

எல்லா வேலைகளையும் வீட்டிலிருந்தே செய்யவும் முடியாது. சில வேலைகளை அலுவலகம் வந்துதான் பார்க்க வேண்டும். சில வேலைகள் வீட்டிலிருந்தே செய்யமுடியும்.

ஆனாலும் முடிவுகள் என்பது முதலாளிகளின் கையில்தான் இருக்கிறது. வற்புறுத்தலற்ற பணித்தலாக இருக்கவேண்டும் என்பதே முக்கியம்.

முதலாளி, தொழிலாளி புரிந்துணர்வில்லாமல் போனால் இது பொருத்தமற்றதாகிவிடும்.. இதில் முக்கியமான செய்தி ஒன்றும் இருக்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்வதா? அல்லது கண்டிப்பாக அலுவலகம் வரவேண்டுமா என்பதெல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டது. கோவிட் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இணக்கம் என்பதால், இது தொழிலாளர் விதிப்படி சட்டமல்ல.

சில முதலாளிகள் தாராள மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு வேலைதான் முக்கியமாக இருக்கும். பணியாளர்கள் எங்கிருந்து பணியாற்றுகிறார்கள் என்பதைவிட, என்ன செய்கிறார்கள் என்பதைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.

புரிந்துணர்வில் பணியாற்றுவதால் நேரம் ஒரு பிரச்சினையாகவே இருக்காது. அதன் தாயாரிப்பு சிறப்பாகவே இருக்கும்.

சில நிறுவனங்களின் தயாரிப்புகள் கூடுதலாகத் தேவைப்படாது. அதனால் பணியாளர்களை நெறுக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

இக்கால கட்டத்தில் தேவைக்கானவற்றில் தட்டுப்பாடு அறியப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version